12216 – நிவேதினி: பால்நிலைக் கற்கை நெறிச் சஞ்சிகை: இதழ் 9 மலர் 2 (ஆனி 2004).

செல்வி திருச்சந்திரன் (இதழாசிரியர்). கொழும்பு 6: பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனம், 58 தர்மராம வீதி, 1வது பதிப்பு, ஆனி 2004. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).

(4), 83 பக்கம், விலை: ரூபா 75.00, அளவு: 22×14 சமீ., ISSN: 1391-0353.

இவ்விதழில் (ஆனி 2004) இதழாசிரியரின் முன்னுரையுடன் தொடங்கும் ஆறு கட்டுரைகள் தரப்பட்டுள்ளன. பெருந்தோட்டப் பெண்கள் கலாச்சார அழுத்தங்களில் இருந்து மீளல் (மைக்கல் ஜோக்கிம்), பெண்கள் மூளையில் போதிய அறிவு இல்லையா? (திருமகள் இரத்தின சுப்பிரமணியம்), அல்லியின் கதை (காஞ்சனா நடராசன்), வேறு கதையாடல்களின் நோக்கில்: பெண்களினது எழுத்து சுயமரியாதை இயக்கம் பெண்ணிலைவாத மொழிபெயர்ப்பில் தொக்கிநிற்கும் அரசியல் (கே.ஸ்ரீலதா), அஞ்சுகத்தின் சுயசரிதை (செல்வி திருச்சந்திரன்), நூல்விமர்சனம்: மதப் பண்பாட்டின் கோலங்களையும் கருத்தியலை யும் கட்டவிழ்க்கும் ஒரு பால்நிலை நோக்கு (தொகுப்பு-செல்வி திருச்சந்திரன், நூல்விமர்சனம்: சே.அனுசூயா) ஆகிய படைப்பாக்கங்கள் இவ்விதழில் இடம்பெறுகின்றன. இறுதியாக நிவேதினியின் குறி இலக்கும் நோக்கும் என்ற தலைப்பில் ஆசிரியரின் சிறுகுறிப்பும் காணப்படுகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 35072).

ஏனைய பதிவுகள்