12217 – நிவேதினி: பால்நிலைக் கற்கை நெறிச் சஞ்சிகை: இதழ் 16 (2014-2015).

செல்வி திருச்சந்திரன் (இதழாசிரியர்). கொழும்பு 6: பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனம், 58 தர்மராம வீதி, 1வது பதிப்பு, 2015. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

x, 126 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ., ISSN: 1391- 0027.

இவ்விதழில் (இதழ் 16: 2014-2015) இதழாசிரியரின் முன்னுரையுடன் தொடங்கும் பத்துக் கட்டுரைகள் இரண்டு பகுதிகளில் தரப்பட்டுள்ளன. 2014 அக்டோபர் 20இல் மறைந்த தமிழக எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் (1925 – 2014) பற்றிய 1வது பகுதியில் ராஜம் கிருஷ்ணன்: ஒரு மகத்தான பெண்ஆளுமை (லறீனா ஹக்), ராஜம் கிருஷ்ணனின் படைப்பிலக்கிய ஆற்றலும் பெண்நிலைவாத சிந்தனைப் பரவலுக்கு அவரது இலக்கியப் பங்களிப்பும் (சந்திரசேகரன் சசிதரன்), ராஜம் கிருஷ்ணனின் தீவிர சமூகப் பிரக்ஞையும் அவரது உன்னத எழுத்தாளுமையும் (வசந்தி தயாபரன்), உரக்க ஒலித்த பெண்குரல் (சீ.எஸ்.லக்ஷ்மி (அம்பை) ஆகிய நான்கு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. 2வது பகுதியில் பொதுவெளியில் பெண் எழுத்தும் சில சவால்களும் (எம்.எஸ்.தேவகௌரி), பெண்மையின் கட்டமைப்பும் அதன் நீட்சியான ஆண்மையின் அனுகூல அதிகார ஆட்சியும்: ஒரு உளவியல் நோக்கு (செல்வி திருச்சந்திரன்), சங்ககால ஒளவையார் பாடல்கள்: ஒரு பன்முக நோக்கு (நதிரா மரியசந்தனம்), மார்க்சியமும் பெண்ணியமும் (நிரஞ்சினி), பெண்கள் மீதான வன்முறைகளும் அதனை ஒழிப்பதற்கான வழிகளும்: ஒரு சமூகவியல் நோக்கு (பகீரதி மோசேஸ்), குறமகளுடனான நேர்காணல் ஆகிய ஆறு கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Betonred Casino Recensămân

Content Slot rainbow riches | Lucky Lady Charm Deluxe Slot Gratuit Pro Și Împotriva Pentru Sloturi Novomatic Tu 3 Slot Machines România Jucați Cele Apăsător