வண்ணை தெய்வம் (இயற்பெயர்: தெய்வேந்திரன்). சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல. 7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2018. (சென்னை 94: ஆதிலெட்சுமி பிரிண்டர்ஸ்).
xxviii, 244 பக்கம், விலை: இந்திய ரூபா 170., அளவு: 21 x 14 சமீ.
அகரம் சஞ்சிகையில் பிரசுரமான வண்ணை தெய்வத்தின் 26 சிறுகதைகளும், 12 குட்டிக் கதைகளும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. பொன்னம்மாவும் ஒன்பது பிள்ளைகளும், திருமணங்களின் நிறம் சிகப்பு, வயது வந்தவர்களுக்கு மட்டுமல்ல, அந்தரங்கமான சோகங்கள், அவள் அம்மா ஆகிவிட்டாள், கால்கட்டு, எத்தனை எத்தனை மீனாட்சிகள், நோயாளிகள், பெரும் குடிமக்கள், கருணை, ஒரு வெளிநாட்டுத் தாயின் வாழ்க்கை, ஒரு கணவன்-ஒரு மனைவி-ஒரு மரணம், ஒரு வாத்தியார் பாடம் படிக்கின்றார், இன்றைய பிள்ளைகள் பெற்றோரைத் திருத்துகின்றார்களா? பழிவாங்குகின்றார்களா?, தொலைபேசிகள், வெளிநாட்டி லிருந்து யாழ்ப்பாணம் போன வெள்ளையம்மா, வாக்குமூலங்கள், வாழ்க்கையின் மாற்றங்கள், கடிதங்கள், புதிய வெள்ளைக்காரர்கள், அவர்கள் மீண்டும் முருங்கை மரங்களில் ஏறுகின்றார்கள், ஒரு பூசாரி நாய் வளர்க்கின்றார், சிறைப் பறவைகள், கடன்காரர்கள், நியாயங்கள் சிரிக்கின்றன, அவள் சிலுவை சுமக்கின்றாள் ஆகிய தலைப்புகளில் இக்கதைகள் எழுதப்பட்டுள்ளன. தொடர்ந்து இடம்பெறும் பன்னிரு குட்டிக்கதைகளும் அரங்கேற்றம், நிறம் மாறியவர்கள், அகதிகள், ஒட்டாத உறவுகள், கொடுப்பனவு, விரதச் சோறு, நாங்கள் இப்படித்தான், பொருத்தம், சகுனம், அவனால் மாற முடியவில்லை, குற்றவாளிக் கூண்டில் மனுநீதிச் சோழன், சீட்டு ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளன.