12224 – சமாதானத் தூது: கட்டுரைத் தொகுப்பு.

ஜெஹான் பெரேரா (ஆங்கில மூலம்), மா.செ.மூக்கையா (தமிழாக்கம்). கொழும்பு 6: இலங்கை தேசிய சமாதானப் பேரவை, 12/14, புராண விஹாரை வீதி, 1வது பதிப்பு, 2014. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xiii, 355 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ., ISBN: 978- 955-1274-69-6.

தேசிய சமாதான பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளரான கலாநிதி ஜெஹான் பெரேரா எழுதிய ஐம்பது கட்டுரைகளின் தமிழாக்கம் இது. வன்னிக்கு மக்களை மையமாக வைத்த அபிவிருத்தியே தேவை, ஐ.நா.நிபுணர் குழுவின் அறிக்கை ஏற்படுத்தியுள்ள வாதப்பிரதிவாதங்கள், ஐ.நா.நிபுணர் குழுவின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்த சரியான தருணம், பான் கீ மூன் நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பில் நடுநிலையுடன் செயற்படுவோம், சமூகங்களிடையே யான நல்லிணக்கத்துக்கு இன்னொரு பரம்பரை வரை காத்திருப்பதா?, இன்றைய நடைமுறையின் இரட்டைத் தன்மை, ஐ.நா.நிபுணர் குழுவினருடனான சிக்கலை சமாளிக்கக்கூடிய வழிமுறைகள், தனிப்பட்ட அறிவுரைகள் மட்டும் பல்லின மக்களின் மனதை வெல்லாது, அரசு சாரா நிறுவனங்கள் மீதான அரசின் புலனாய்வு விசாரணை, உள்ளூராட்சிசபைத் தேர்தல் வெற்றியை அரசு அர்த்தமுடையதாக்க வேண்டும், இலங்கையின் புதிய எதிர்பார்ப்பு, இலங்கையின் மதிப்பு தொடர்ந்தும் பாதிப்புக்குள்ளாகி வருவது ஏன்? என்பன போன்ற ஐம்பது தலைப்புகளில் இவரது ஆக்கபூர்வமான கட்டுரைகள் அமைந்துள்ளன.

ஏனைய பதிவுகள்