ஜனநாயகம் மற்றும் தேர்தல் செயற்பாட்டு உதவிக்கான சர்வதேச நிறுவகம் (IDEA). கொழும்பு 7: மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம், 24/2, 28ஆவது ஒழுங்கை, ஓவ் பிளவர் வீதி, 1வது பதிப்பு, 2004. (கொழும்பு 10: குளோப் பிரின்டிங் வேர்க்ஸ்).
40 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 26×18 சமீ.
இக்கொள்கைச் சுருக்கமானது சுவீடனிலுள்ள ஐனுநுயு நிறுவனத்தின் வெளியீடான வன்முறை மோதலுக்குப் பின்னரான மீளிணக்கப்பாடு: ஒரு கையேடு (Reconciliation After Violent Conflict: Policy Summary 2003) என்ற நூலின் சாராம்சமாகும். மூல நூலின் உதாரணங்களும் விடயக் கற்கைகளும் நீக்கப்பட்டு வலுவூட்டும் விவாதங் களும் சுருக்கப்பட்டுள்ளன. கடந்தகால வன்முறையின் மரபுரிமைப் பண்பு பொருத்தமான முன்னேற்றமான கொள்கை உருவாக்கத்தை வரைவதற்கான முக்கிய அம்சங்களின் சுருக்கமே இக்கையேட்டில் தொடர்ந்தும் இருக்கும் சாராம்சமாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 1960/25489).