12230 – அகில உலக மனித உரிமை வெளியீடு: ஆசிரியர்களுக்கான குறிப்புக்கள்.

அ.பாலசுப்பிரமணியம் (மொழிபெயர்ப்பாளர்). கொழும்பு: வெளியீட்டுப் பிரிவு, அரசகரும மொழித் திணைக்களம், 2வது பதிப்பு, 1964, 1வது பதிப்பு, 1956. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகம்).

vi, (4), 89 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21X14 சமீ.

இந்நூல் வெளியீடும் ஆசிரியரும், வெளியீட்டின் வரலாறு, மனித உரிமை வெளியீடு, அறிவு விருந்தின் ஆக்கம், மனித உரிமைகளைப் பற்றிக் கற்பித்தல், வகுப்புப் புறச் செய்கைகள் ஆகிய ஆறு பிரிவுகளின்கீழ் எழுதப்பட்டுள்ளது. இந்நூலின் இரு அனுபந்தங்களாக மனித உரிமைகளைக் காப்பதற்கான முறைகளையும் வழிகளையும் விளக்கும் சில உதாரணங்கள், பாடசாலை வாழ்க்கை முறை ஆகிய இரண்டு குறிப்புக்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 39704. நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தின் சேர்க்கை இலக்கம் 014143)

ஏனைய பதிவுகள்

17286 நுணசை ஆரம் 2017.

சி.நாகலிங்கம் (இதழாசிரியர்). யாழ்ப்பாணம்: கைதடி-நுணாவில் அரசாங்க தமிழ் கலவன் பாடசாலை, 1வது பதிப்பு, 2017. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ மாருதி பிரிண்டேர்ஸ், இல. 555, நாவலர் வீதி). (8), 154 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: