கி.செ.துரை. திருச்சி 26: தமிழர் நடுவம், எண்:1744, 100 அடி சாலை, அண்ணா நகர், நவல்பட்டு, 1வது பதிப்பு, மார்ச் 2018. (சிவகாசி: ஸ்ரீ சண்முகா பிராசஸ்).
180 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா 200., ISBN: 978-87-970470-0-2.
புகலிடத் தமிழ் வானொலிகளில் சர்வதேசச் செய்தியாளராகவிருக்கும் டென்மார்க், கி.செ.துரை அவர்களின் 34ஆவது நூல் இது. அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப்பின் வெற்றிக்கும் ஹிலரி கிளின்டனின் தோல்விக்கும் காரணமாக இருந்ததாகக் கருதப்படும் தேர்தலின்போது சந்தேகிக்கப்பட்ட ரஷ்யாவின் பின்னணியும், அதன் கருவியாகச் சந்தேகிக்கப்படும் சைபர் யுத்தமும் பற்றிய மிக விரிவான செய்திகளை 27 அத்தியாயங்களில் சுவாரஸ்யமாகத் தொகுத்து வழங்கும் ஒரு தமிழ் நூல் இது. சர்வதேச அரசியல் பற்றிய நூல்களின் வருகை தமிழ்ச் சூழலில், குறிப்பாக ஈழத்துத் தமிழ்ச் சூழலில் மந்தகதியில் அமைந்துள்ள சூழலில் இந்நூலின் வருகை முக்கியமானது.