க.சண்முகலிங்கம் (தொகுப்பாசிரியர், மொழிபெயர்ப்பாளர்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
viii, 108 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-578-9.
சர்வதேச அரசியல் நிபுணர்கள் பலரால் எழுதப்பட்ட 18 கட்டுரைகளின் தமிழாக்கமே இந்நூலாகும். இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இக்கட்டுரைத் தொகுப்பின் ‘உலகம்’ என்ற முதலாவது பகுதியில் நல்லாட்சி என்றால் என்ன கிரேக்கம் தரும் பாடங்கள் (சுமனசிறி லியனகே)/ இமாலயச் சாதனைக்குத் தயாராகும் ஹிலாரி கிளின்டன் (சித்தானந் ராஜ்கட்டா)/மலேசியாவும் இலங்கையும்: ஒற்றுமைகளும் வியப்பளிக்கும் வேற்றுமைகளும் (குமாரி டேவிட்)/ முதலாம் உலக யுத்தத்திற்குப் பிறகு கடந்துவிட்ட ஒரு நூற்றாண்டு (யோசப் எஸ்.நை)/நேபாள மக்களில் பெரும்பகுதியினர் எதிர்க்கும் புதிய அரசியல் யாப்பு (சி.கே.லால்)/ சிங்கப்பூரின் ஆங்கில மொழிக் கொள்கை: லீ குவான் யூ வகுத்த முன்மாதிரி (குமார் டேவிட்)/ தென்சீனக் கடலிலும் கிழக்கேயும் சீனா கிளப்பும் சச்சரவுகள்: கொந்தளிப்பு ஏற்படுமா? (குமார் டேவிட்)/செல்வச் செழிப்புமிக்க நாடாவதற்கு முன்னர் முதியோர் நாடாகப் போகும் சீனா (மோகன் குருசாமி) ஆகிய 8 மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. ‘மேற்கு ஆசியா’என்ற இரண்டாவது பகுதியில் அமெரிக்கா நேச நாடுகளுக்கு ஆயுதங்களை வழங்குதல்: சூழும் ஆபத்துகள் டேவிட் அக்ஸ் (டேவிட் அக்ஸ்)/ சிரியாவில் ரஷ்ஷியத் தலையீட்டின் பின்னணி (ஆசிரியர் பெயர் குறிப்பிடப்படவில்லை)/மேற்காசியாவின் பாதுகாப்பு (தர்மிஸ் அகமட்)/ ஜோர்தான்: வளைகுடாவில் ஓர் அமைதிப் பூங்கா (மிச்செல் ஜான்சன்)/ ஐரோப்பாவின் அகதிகள் நெருக்கடியின் வேர்கள் (தனஞ்சே திரிபாதி)/ அகதிகளா இடம்பெயர்ந்தோரா?(மனோஜ் சன்கினசா)/பிம்பங்கள் வரலாற்றை மாற்றும் சக்தியுடையனவா? (இயன் ஜக்)/மத்திய கிழக்கில் சர்வதேசம் மூட்டிய தீ (ஜமால் கஞ்)/அரபு நாடுகள் கூட்டு இராணுவத்தை உருவாக்கியதன் காரணம் யாது? (சிப்லி டெல்ஹமி)/எப்போதும் வன்முறைத் தீர்வுகளையே நாடிய ஏரியல் ஷரோன் (1928-2014) (அவிஷலம்) ஆகிய 10 மொழிபெயர்ப்புக் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.