12240 – சைப்பிரஸ் மற்றும் சூடான்: அவர்களது சமாதானத்தின் இரு உதாரணங்கள்.

நியமுவா வெளியீடு. கொழும்பு 10: நியமுவா வெளியீட்டகம், மக்கள் விடுதலை முன்னணி, 198/19, பஞ்சிக்காவத்தை வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2007. (புறக்கோட்டை: ஆர்.சீ. பிரின்டர்ஸ், அன்ட் பப்ளிஷர்ஸ், 70, மிஷன் வீதி).

110 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 21×14.5 சமீ., ISBN: 955-8696-08-0.

இலங்கையின் தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக சைப்பிரஸ் அல்லது சூடான் ‘மாதிரியை’ விடப் பொருத்தமான வேறொன்றும் இல்லை என்ற ஏகாதிபத்தியவாதிகளின் கூற்றை மக்கள் விடுதலை முன்னணி (JVP) மறுதலித்து இப்போலிக் கருத்துக்கு எதிராக மக்களை அணிதிரட்டும் நோக்குடன் சிங்களத்தில் ஜுலை 2006இல் வெளியிடப்பட்ட நூலின் தமிழாக்கமே இதுவாகும். இந்நூ லைத் தமது நியமுவா அமைப்பின்மூலம் பிரசுரித்துள்ளனர். இரண்டு பகுதிகளில் எழுதப்பட்டுள்ள இந்நூலின் முதலாம் பகுதியில் பிரிவினைவாதத்தால் அடிவாங்கும் சைப்பிரஸ், சைப்பிரசின் வரலாறு, சைப்பிரசின் தேசியப் பிரச்சினை, தற்போதைய நிலை ஆகிய அத்தியாயங்களும், இரண்டாம் பகுதியில் சூடான் ஒரே நாட்டிலிருந்து இரு நாடுகள் வரை, சூடானின் வரலாறு, சூடானிய தேசியப் பிரச்சினையின் தற்போதைய வடிவம், டாபூர் பிரச்சினை, சூடானுக்குள் ஐக்கிய நாடுகள் சபையின் தலையீடு, சூடானிய தேசியப் பிரச்சினையில் நோர்வேயின் தலையீடு, சூடானின் எண்ணெய்யோடு பிணைந்த அரசியல் பொருளாதார தொடர்புகள் ஆகிய அத்தியாயங்களும் உள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 48437).

ஏனைய பதிவுகள்

No-deposit Extra Requirements 2024

Posts More Casino Codes and you may Put An assessment Different kinds of Join Incentives How do i Allege The benefit Requirements From the Ignition