12242 – படைக் குறைப்பும் மூன்றாம் உலகமும்.

லயனல் மென்டிஸ். கொழும்பு 6: சாமர அச்சகமும் புத்தக வெளியீட்டாளர்களும், 22ஏ, மல்லிகா ஒழுங்கை, 1வது பதிப்பு, நவம்பர் 1984. (கொழும்பு 6: சாமர அச்சகம், 22ஏ, மல்லிகா ஒழுங்கை).

140 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21X14 சமீ.

உலக சமாதானம் நிலவ வேண்டுமானால் படிப்படியாகப் படைக்குறைப்பை மேற்கொள்வது அவசியம். எனவேதான், படைக்குறைப்பும் சமாதானமும் அபிவிருத்தியும் பிரிக்கமுடியாதவையாக இருக்கின்றன. இப்பிரச்சினைகளை முடிந்தவரையில் விளக்கி இந்நூல் எழுதப்பட்டிருக்கின்றது. இவை மூன்றாம் உலகம்: மானிட நிலவரம், ஆதிக்கம் பெற முயற்சி, இராணுவத் தொழில் தொகுப்பு, ஆயுத உற்பத்திப் போட்டியின் பளு, ஆயுதச் சந்தை, படைக்குறைப்பும் அபிவிருத்தியும் ஸ்தூலமான மதிப்பீடுகள், கிழக்கு-மேற்கின் இராணுவச் சமபலம், உலக அரசியலின் இரு போக்குகள் ஆகிய ஒன்பது அத்தியாயங்களில் விளக்கப் பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 31787).

ஏனைய பதிவுகள்