அ.ப.மு.அஷ்ரப், செல்வி இரா. சர்மிளாதேவி (இதழாசிரியர்கள்). பேராதனை: தமிழ்ச்சங்கம், பேராதனைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1998. (களுபோவில: டெக்னோ பிரின்ட், 83, ஆஸ்பத்திரி வீதி, தெகிவளை).
xii, 160 பக்கம், ஓவியங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×19சமீ.
இவ்விதழில் மூன்று பிரிவுகளின்கீழ் படைப்பாக்கங்களை வகுத்துப் பதிவுசெய்யப்பட்டுள்ளன. முதலாவது பகுதி பல்சுவை அறிவியல் பகுதியாகும். இதில் இனமுரண்பாட்டுக்குத் தீர்வு காணுதல் தொடர்பாக மீறப்பட்ட வாக்குறுதிகளும் கைவிடப்பட்ட ஒப்பந்தங்களும் (அம்பலவாணர் சிவராஜா), உலங்கு தொலைபேசி சேவை-ஆழடிடைந வுநடநிhழநெ (து. வசீகரன்), மலையகத் தமிழ் நாவல்கள்: சில அவதானிப்புகள் (க.அருணாசலம்), நுகர்வோர் விலைச் சுட்டெண்கள் பற்றிய எண்ணக்கருக்களும் பயன்பாடுகளும் (பா.றெஜீஸ் பெர்னாண்டோ), இந்திய மெய்யியல் மரபில் சாருவாகம் – ஓர் நோக்கு (எம்.ஐ.இஸ்ஹாக்), பொருளாதார வளர்ச்சியில் காலநிலையின் தாக்கம் (நல்லதம்பி நல்லராசா), தமிழ் இலக்கிய வரலாற்றில் ஐரோப்பியர் காலம் (துரை மனோகரன்), உலகக்கிண்ண உதைபந்தாட்டம் (க.நரேந்திரநாதன்), பத்மாவதி சரித்திரத்தில் பெண்கள் நிலை (செல்வி.அம்பிகை வேல்முருகு), கணணியில் தமிழ் (ப. பிரியதர்சன்), பௌத்த சிந்தனையில் சூன்யவாதத்தின் முக்கியத்துவம் (எம்.ஐ.மஜீட்), மனிதனைப் பிரதியெடுப்பது சாத்தியமா? (வே.தி.பத்மநாதன்) ஆகிய படைப்பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன. இரண்டாவது பகுதி தொழில்நுட்ப வளர்ச்சியும் மனித நேயமும்-சிறப்புப்பகுதி எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. இதில் கட்டுரைகளாக விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியும் மனித நேயமும் (சி. தில்லைநாதன்), மனித உரிமை மீறல்களால் ஏற்படும் உளவியல் தாக்கங்கள் – ஒரு நோக்கு (வஸீல்), சிறியோரல்லாம் சிறியருமல்ல (ம.திவாகரன்), உலகம் ஓர் கிராமமாதல்: சாத்தியப்படும் நிலைமைகள் (எம்.எம்.எம். றிபாய்), ‘பதினாறும் பெற்று பெருவாழ்வு….” (உ.கருணாகரன்) ஆகிய கட்டுரைகளும், சிறுகதைகளாக அந்த தியாகச் சுடர் உறங்கவில்லை (மாதுமீனா), துளிர்ப்பு (எம்.எச்.எம்.ஜவ்பர்), மாட்டு வண்டி (முலம்: சோமரத்ன பாலசூரிய), கூண்டு (உமா கிருஷ்ணசாமி),ஏகலைவன் (ச.மதிரூபன்), வேலிகள் (தி.பத்மநாதன்) ஆகிய ஆக்கங்களும், கவிதைகளாக- எங்கள் வீடு (நவீனன்), தேற்றுவாரின்றிய தேம்பல்கள் (நா. மணிமேகலை), விண்ணப்பம் (ஸ்ரீ பிரசாந்தன்), நாய் என்று நினைத்திடாதீர் (எஸ்.உதயசீலன்), நாளை வருவான் ஒரு மனிதன் (புரட்சிக்கமால்), தொடரும் எரிகை (ஞானாம்பிகை விஸ்வநாதன்), ஓ வெண்புறாவே (லறீனா அப்துல் ஹக்) ஆகிய படைப்புகளும் இடம்பெற்றுள்ளன. இப்பிரிவில் பல்கலைக்கழக கல்வியும் வாழ்கையும் – ஓர் கலந்துரையாடல் (தொகுப்பு: பொ.நக்கீரன், பா.மணிமாறன்), புதிய கல்விச் சீர்திருத்தமும் அதன் அடிப்படைகளும் அவசியமும் (நேர்காணல் தொகுப்பு: திருமலை அஷ்ரப்) ஆகிய ஆக்கங்களும் இடம்பெற்றுள்ளன. மூன்றாவது பகுதியில் சங்க நிகழ்வுகளின் மீள்பார்வைகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 18825. நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தின் சேர்க்கை இலக்கம் 008312).