12361 – இளங்கதிர்: 32ஆவது ஆண்டு மலர் 1998-1999.

12361 இளங்கதிர்: 32ஆவது ஆண்டு மலர் ; 1998-1999. பாலகிருஷ்ணன் பிரதாபன் (இதழாசிரியர்). பேராதனை: தமிழ்ச்சங்கம், பேராதனைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1999. (களுபோவில: டெக்னோ பிரின்ட், இல. 6, ஜெயவர்த்தன அவென்யூ, தெகிவளை).

(12), 182 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25.5×19சமீ.

இவ்விதழின் கட்டுரைகளாக, சிலிக்கன் பள்ளத்தாக்கு: உலகின் உயர் தொழில் நுட்பச் சுரங்கம்: இன்றைய நிலைமை பற்றிய சில குறிப்புக்கள் (மா.செ.மூக்கையா), உலக கணணி வலைப்பின்னல் ; Internet (வே. மகிந்தன்), ஈழத்துப் பூதந்தேவனார் பற்றிய கருத்து நிலைகள்: ஓர் உசாவல் (வ.மகேஸ்வரன்), வங்கித்துறையில் ஏற்பட்டுவரும் நவீன தகவல் தொழில்நுட்பங்கள் பற்றிய ஒரு நோக்கு (வ. தர்மதாசன்), மன்னார் மாவட்டத்தின் நாட்டுக்கூத்துக் கலை (அ. எட்வேட் நிக்சன் சொய்சா), கோதாவரி நதியும் சான்றோர் கவியும் (க.ஜெயநிதி), இலங்கையின் பாதுகாப்புச் செலவினமும் பொருளாதார வளர்ச்சியில் அதன் தாக்கமும் (இராசா. கோகுலதாஸ்), சாருமதியின் கவிதைகள் – ஒரு கண்ணோட்டம் (செ.சிங்காரவேல்), இலங்கையிலுள்ள தமிழர்களும் சுயநிர்ணய உரிமை பற்றிய தத்துவமும் (சுமணசிறி லியனகே), தாவர நோயியலில் மூலக்கூற்று உயிரியலின் பங்கு (மணிமேகலா நாகநாதன்), சர்வதேச அரங்கை எதிர்கொள்ளும் சுதேசிய அரங்குகள் (சி. ஜெயசங்கர்), பனைவளத்தின் விஞ்ஞான, பொருளாதார கோட்பாடுகள் – ஒரு நோக்கு (சோ. கோகுலதாசன்), ஆகிய கட்டுரைகளும், இது மரண தேசம் (ஐ.எம்.ஜெமீல்), எச்சம் பார்த்துச் சொல்கிறோம் (வே. முருகதாசன்), காலத்தின் கல்லறையில் … (யோ. அன்ரலி யூட்) ஆகிய கவிதைகளும், உன்னோடு (சி. மைதிலி), அகதி எனும் முத்திரை (றெ.வைகுந்தன்) ஆகிய இரு சிறுகதைகளும், இடம்பெற்றுள்ளன. இவற்றைவிட 20ஆம் நூற்றாண்டை நோக்கிய மீள்பார்வையும், 21அம் நூற்றாண்டை நோக்கிய எதிர்வுகூறலும் என்ற பிரிவில் இலங்கைப் பல்கலைக்கழக வளர்ச்சிக்குத் தமிழர் பங்களிப்பு (பேராசிரியர் சி. தில்லைநாதன்), இருபதாம் நூற்றாண்டில் தலைமைத்துவம்: ஒரு மீள் பார்வை (பூ.சோதிநாதன்), சுதந்திர இலங்கையின் அரசியலமைப்புகளில் மனிதவுரிமைச் சட்டங்கள் – ஓர் ஒப்பிட்டாய்வு (ஆறுமுகம் யோகராஜா), இலங்கையில் தேசிய ஒருமைப்பாட்டுப் பிரச்சினைக்கான அடிப்படைக் காரணங்கள் (இஸ்மாயில் ஏ. நஜீம்), தமிழர்களின் பாரம்பரிய தாயகம் சார்பு – எதிர்வாதங்கள் (அம்பலவாணர் சிவராஜா), சமூக அரசியல் மெய்யியல் நோக்கில் காந்தியஅஹிம்சையும், வன்முறையும், இலங்கைத் தமிழ்த் தேசியவாதத்தின் பரிணாமம் (சுவர்ணராஜா நிலக்ஷன்), எங்கள் வரலாறுகள் காக்கப்படுமா? (யோகநாதன் திலீபன்), அடுத்த நூற்றாண்டா, அது எப்போது? (சி.சிவசேகரம்), புதிய நூற்றாண்டின் தேவை மாற்றங்களை உள்வாங்கும் முகாமை: இலங்கை ஒரு பார்வை (வ.சிவலோகதாசன்), நவீன விவசாயத்துறை: 21ஆம் நூற்றாண்டை நோக்கி …(முருகேசு ஸ்ரீ வேணுகோபால சர்மா), 21 ஆம் நூற்றாண்டில் தமிழ் மொழியின் பயன்பாடு ஆகிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இவ்விதழுக்கான கவிதைகளை ஸ்ரீ பிரசாந்தன், வல்லிபுரம் சுகந்தன், கி.பாலநாதன், ஷர்மிளா றஹீம், முனவ்பியா ஏ.கபூர், லறீனா அப்துல் ஹக், வேழினி வல்லிபுரம் ஆகியோர் எழுதியுள்ளனர். மீன் சந்தை (பா.மணிமாறன்), உறவுகளைத் தேடி … (ந.சந்திரிக்கா), தேடல் (சியாமளா சிவம்), கருகிப்போன அரும்புகள் (வல்லிபுரம் சுகந்தன்) ஆகியவை இம்மலரின் சிறுகதைகளாக இடம்பெற்றுள்ளன. (இந் நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 18822).

ஏனைய பதிவுகள்

Trial

Posts What’s the Rtp Of your Immortal Implies Expensive diamonds Position? Glucose Hurry Slot Purchase Bonus Ability Leading 777 Ports Business Bet on Cost Coming