12256 – மேதின வரலாறும் அதன் போதனைகளும்.

வீ.எல்.பெரைரா (பொதுச் செயலாளர்). கொழும்பு 12: மலையக இளைஞர் பேரவை, 74. 2/1, டாம் வீதி, 1வது பதிப்பு, மே 1978. (அச்சக விபரம் தரப்படவில்லை).

12 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×13.5 சமீ.

மே தினம் எனப்படும் உலகத் தொழிலாளர் தினம் ஆண்டுதோறும் மே முதலாம் திகதி உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுவதாகும். 1889 ஜூலை 14 அன்று பாரீசில் சோசலிசத் தொழிலாளர்களின் ‘சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம்’ கூடியது. 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்படப் பலர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும், 1890 மே 1 அன்று அனைத்துலக அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடப்பட்டது. இந்த அறைகூவலே மே முதல் நாளை, சர்வதேச தொழிலாளர் தினமாக, மே தினமாக அனுஷ்டிப்பதற்கு வழிவகுத்தது. இந்நூல் மேதினம் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளையும், இலங்கையின் பொருத்தப்பாடுகளையும் எளிய நடையில் விளக்குகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2750).

ஏனைய பதிவுகள்

Online online mobile slots Slots

Posts Great features Dodging The debt Bullet: The safety Secure Away from Trial Harbors On the internet Slot Demonstrations Enjoy Totally free Slots As opposed

12372 – கலாசுரபி: தூண்டல்-02, துலங்கல்-12.

மலர்க்குழு. யாழ்ப்பாணம்: தேசிய கல்வியியற் கல்லூரி, கோப்பாய், 1வது பதிப்பு, 2012. (யாழ்ப்பாணம்: குரு பிரிண்டர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி). ix, 140 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×17.5