ஏ.எம்.மொஹமட் றஊப் (இதழாசிரியர்). கொழும்பு: இலங்கை சட்டக் கல்லூரி தமிழ் மன்றம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 1991. (கொழும்பு 12: குமரன் அச்சகம், 201 டாம் வீதி).
(142) பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×19 சமீ.
இலங்கைச் சட்டக் கல்லூரியின் சட்ட மாணவர் தமிழ் மன்றத்தின் 1991ஆம் ஆண்டுக்கான ஆண்டு மலர் (16-09-1990) பல்வேறு தமிழ் ஆங்கிலக் கட்டுரை களுடன் வெளிவந்துள்ளது. ஆசிச் செய்திகள், வருடாந்த அறிக்கைகளுடன், இலங்கைத் தேர்தல்களும் அங்கத்தவர்கள் தெரிவுசெய்யப்படும் முறைகளும் (கே. ஜீ.ஜோன்), விவாகரத்து ஒரு கண்ணோக்கு (யூட் உதயகுமார்), சட்டவியலில் தண்டனைகள் ஒரு கண்ணோட்டம் (எம்.கே.பேரின்பராஜா), சொத்தும் சொத்துரிமையும் (சீ.வீ.விக்கினேஸ்வரன்), குற்றவியல் வழக்குகளில் கடும் பொறுப்பு (இ.மு.இஸ்ஹர்), கருச்சிதைவு சட்டபூர்வமாக்கப்படலாமா? (சுமந்திரன் மதியாபரணம்), நமது நாட்டுக் கைத்தொழில் பிணக்குகளில் முதுநிலை விசாரணையின் பங்கு (M.Z.M.ஹில்மி), விளம்பல் வழக்குகள் (யூ.ஏ.மௌஜுத்), மீள ஒப்படைப்பும் பயங்கரவாதமும்-சர்வதேச சட்டத்தில் ஒரு ஆய்வுரைக் கண்ணோட்டம் (எம்.இளஞ்செழியன்) ஆகிய கட்டுரைகளும், தேவை தானா (கவிதை, கேசவன் முதலி), நான் கிளம்பிவிட்டேன் என்னைத் தடுக்காதே (கவிதை, எஸ்.எம்.எம்.நிளாம்), இனியாவது புரியுமா?(கவிதை, மொஹமட் மெக்கி), ஒரு நிமிடம் (கவிதை, விஜிதா சண்முகராஜா), தண்டனை தண்டனை (சிறுகதை, ரசீத் எம்.இம்தியாஸ்), ஏது விடியல் (கவிதை, வி.ஜோன்சன்), கண்ணுறங்கு கண்மணியே (கவிதை, கி.துரைராசசிங்கம்) ஆகிய படைப்பாக்கங்களும் தமிழில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 11090).