12262 – நீதிமுரசு 1994.

சின்னத்துரை மயூரன் (இதழாசிரியர்). கொழும்பு 12: இலங்கை சட்டக் கல்லூரி தமிழ் மன்றம், 244, ஹல்ஸ்ரொப் வீதி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1994. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).

(130) பக்கம், அட்டவணைகள், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18.5 சமீ.

இலங்கைச் சட்டக் கல்லூரியின் சட்ட மாணவர் தமிழ் மன்றத்தின் 1994ஆம் ஆண்டுக்கான ஆண்டு மலரின் 31ஆவது இதழ் (17-09-1994) பல்வேறு தமிழ் ஆங்கிலக் கட்டுரைகளுடன் வெளிவந்துள்ளது. ஆசிச் செய்திகள், வருடாந்த அறிக்கைகளுடன், மாகாண சபைகளும் அவற்றின் அமைப்பும் அவை உருவாக்கப் படுவதற்குக் காரணமாயிருந்த சட்டமும் (மாணிக்கவாசகர் கணேசராஜா), ஆவணப்பதிவில் முந்துரிமை (க.வி.விக்கினேஸ்வரன்), உரிமை நிறுவல் வழக்கின் தன்மையும் பயன்பாடும் (சிவா. திருக்குமரன்), மனநோயாளியும் குற்றம் புரிய முடியுமா? (ஜானகி கணேந்திரா), நீதி (திருமதி சு.இராஜகுலேந்திரா), ஒரு புதிய கம்பெனியைக் கூட்டிணைத்தல் (கந்தையா நீலகண்டன்), திருமணத்தில் வலிதுடைமையும் சட்ட விளைவுகளும் (வாசுகி நடராஜா), அரசியலமைப்பும் சட்ட ஆட்சியும் (இராமநாதன் கண்ணன்), நிருவாகச் சட்டம் -ஒரு கண்ணோட்டம் (நா.செல்வக்குமாரன்), தீங்கியல் சட்டத்தில் இடம் கொண்டிருப்போரின் பொறுப்புடைமை (ஜீ.எம்.சிவபாதம்), நிர்வாகத்திற்கான பாராளுமன்ற ஆணையாளர் (எச்.எம்.எம்.பஸில்), தீங்கியலில் நரம்பு மண்டலத் தாக்கத்துக்காக வழக்குத் தொடரக்கூடிய சந்தர்ப்பங்கள் (ராமையா யோகேஸ்வரி) ஆகிய சிறப்புக் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 23644).

ஏனைய பதிவுகள்

14777 நித்தியாவின் அர்த்தமுள்ள மௌனம்.

மாலினி வசந்த். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2013. (சென்னை 4: ஸ்கிரிப்ட் ஆஃப்செட்). iv, 160 பக்கம்,