12265 – நீதிமுரசு 2012.

துளசிகா கேசவன் (இதழாசிரியர்). கொழும்பு 12: இலங்கை சட்டக் கல்லூரி தமிழ் மன்றம், 244, ஹல்ஸ்ரொப் வீதி, 1வது பதிப்பு, 2012. (Fast Printers 289, ½, காலி வீதி).

(32), 186 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29×21 சமீ.

இலங்கைச் சட்டக் கல்லூரியின் சட்ட மாணவர் தமிழ் மன்றத்தின் 2012ஆம் ஆண்டுக்கான ஆண்டு மலரின் 47ஆவது இதழ், பல்வேறு தமிழ் ஆங்கிலக் கட்டுரைகளுடன் வெளிவந்துள்ளது. ஆசிச் செய்திகள், வருடாந்த அறிக்கைகளுடன், 1979ஆம் அண்டு 44ஆம் இலக்க ஆரம்ப நீதிமன்றங்கள் நடபடிச் சட்டத்தின் கீழான பிரிவு வழக்குகள் (க.வி.விக்கினேஸ்வரன்), மாறிடும் சமூகத்தில் ஊடகங்களின் வகிபங்கு: ஒருமெய்ப்பொருள் நோக்கு (வி.ரி.தமிழ்மாறன்), தேசவழமையின் கீழான ஆதனம் (செ.செல்வகுணபாலன்), முஸ்லிம் தனியார் சட்டத்திற்கு திருத்தம் அவசியமா?(A.H.G. அமீன்), குற்றவியல் நீதிமன்றம் ஒன்றில் எதிரி ஒருவர் எவ்வாறு விளங்கப்படுகிறார்? (கே.ஜீ.ஜோன்), பிரேத பரிசோதனையின் அவசியம் (சுஜப் ஆஷீக்), நிபுணத்துவ சாட்சியம் (துளசிகா கேசவன்), குடியியல் நடவடிக்கை முறைச் சட்டக் கோவையில் வழக்குரைகளின் திருத்தம் மிகவும் திறந்த ஒரு அணுகுமுறையைக் கொண்டிருத்தலும் ஒரு விதிக்காக திருத்தம் ஒன்று பொதுவாக அனுமதிக்கப்படுதலும் (மகிழினி மடோனா மரியதாஸ்), இலங்கையில் சிறுவர் உரிமை தொடர்பான சட்ட ஏற்பாடுகளும் மோசமாக அதிகரித்துவரும் சிறுவர் துஷ்பிரயோகமும் (யோகானந்தி யோகராசா), இலங்கை தேசிய இயக்கமும் (தேசிய காங்கிரஸ்) தளர்வும் (சுஜீவன் நடராஜா), மரண வாக்குமூலம் (ஐஸ்வர்யா சிவகுமார்), சிறுவர் உழைப்பு எனும் கண்ணோட்டத்தில் சிறுவர் பாதுகாப்பு நிறுவனங்களின் சமூகப் பணிகள் (M.K.F. பஸீலா) ஆகிய சட்டவியல் சார்ந்த தமிழ்க் கட்டுரைகளும், ஆங்கிலக் கட்டுரைகள் சிலவும், கம்பவாரிதி இ.ஜெயராஜ், ஏ.எம்.எம்.அலி, ஐஸ்வர்யா சிவகுமார், பாத்திமா இர்பியா ஷரீப், என்.நஜ்முல் ஹுசைன் ஆகியோரின் கவிதைகளும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 244477).

ஏனைய பதிவுகள்