12368 – கல்வியியலாளன் ஆய்விதழ்: தொகுதி 04, ஏப்ரல் 2016.

பரராஜசிங்கம் இராஜேஸ்வரன் (பிரதம ஆசிரியர்). யாழ்ப்பாணம்: கல்வியியல் வெளியீட்டு நிலையம் (Educational Publication Centre), 55/3, விளையாட்டு மைதான வீதி, கல்வியங்காடு, 1வது பதிப்பு, ஏப்ரல் 2016. (யாழ்ப்பாணம்: கரிகணன் தனியார் நிறுவனம், இல. 424, காங்கேசன்துறை வீதி). 1

32 பக்கம், அட்டவணைகள், வரைபடங்கள், விலை: ஆண்டு சந்தா ரூபா 1500., அளவு: 24.5×19 சமீ., ISSN: 1800-1378.

இவ்விதழில், யாழ்ப்பாண மாவட்ட ஆரம்பக் கல்விப் பாடசாலைகளில் 2003ஆம் ஆண்டிலிருந்து சிறுவர் நட்புறவுப் பாடசாலைச் செயற்றிட்டத்தை அமுலாக்கலும் பிரச்சினைகளும் (பா.தனபாலன்), வகுப்பறைச் செயற்பாடுகளுக்கூடாக கற்றல் சாராத தேர்ச்சிகளை வளர்ப்பதில் ஆசிரியர்களின் பங்களிப்பு (சந்திரிகா நாகேந்திரன், ஜெயலட்சுமி இராசநாயகம்), பாடசாலைகளில் தரம் 10,11 இல் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பாடம் கற்றல்-கற்பித்தலில் எதிர்நோக்கப்படும் பிரச்சினைகளும் அவற்றுக்கான தீர்வுகளும் (சுபோதினி திசாகரன், ஆனந்தமயில் நித்திலவர்ணன்), பாடசாலை மட்டத்தில் வழிகாட்டல் ஆலோசனைச் சேவையை வினைத்திறன் மிக்கதாக நடைமுறைப்படுத்துவதில் எதிர்கொள்ளப்படும் பிரச்சினைகள் (ஞானசக்தி கணேசநாதன்), தொழிற்தகைமை பெற்ற ஆசிரியர்களின் கற்பித்தல் உபாயங்கள் (சபாரட்ணம் அதிரதன்), யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள வகை 1 பாடசாலைகளில் கல்விச் செயற்பாடுகளின் தரவுறுதியைப் பேணுவதில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள் (வேல்நாயகம் திருச்சபேசன்), பௌதிகவியல் ஆய்வுகூடச் செயற்பாடுகளை மேற்கொள்வதில் மாணவர்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகள் (சின்னத்துரை குகன்), ஈழத்துத் தமிழ்ப் பத்திரிகைகளின் வரலாற்றில் இந்துசாதனம் (சின்னத்தம்பி பத்மராசா), (Investigation
of students’ achievement in Mathemetics in the G.C.E.O/L Examination in Ambagamuva
Educational Zone (Sathasivam Amirthalingam) பன்முக நுண்மதி கற்றல் கற்பித்தல் கோட்பாட்டில் தொழில்நுட்பக் கருவிசார் வளங்களின் பங்களிப்பு (சுப்பிரமணியம் பரமானந்தம்) ஆகிய படைப்பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 036397).

ஏனைய பதிவுகள்

Casino Free Spins 2024

Content Monkey warrior Slot Game Review | Beschränkung Der Freispiele Casino Extra: 25 Freispiele Ohne Einzahlung! Verfügbare Spiele Ein Ort Der Unterhaltung: Das Casino Als

Allen Gokkasten Optreden

Volume Irish eyes online slot: Slotmachines In Buitelen F Aq Betreffende Willekeurig Runner Book Ofwel Fortune Gokkas Schapenhoeder Speel Jij Gokautomaten Over 5 Rollen Watje