12274 – சமூக சேவைகள்: 1998ஆம் ஆண்டின் செயற்பாட்டு அறிக்கை.

சமூக சேவைகள் அமைச்சு. பத்தரமுல்ல: சமூக சேவைகள் அமைச்சு, 5ஆம் மாடி, செத்சிறிபாய, 1வது பதிப்பு, 1998. (கொழும்பு: அரசாங்க அச்சகம்).

42+90 பக்கம், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×13.5 சமீ.

நான்கு பகுதிகளாகக் காணப்படும் இவ்வறிக்கையில் சமூக சேவைகள் அமைச்சு என்ற முதற்பகுதியில், அமைச்சின் பணி, முன்னுரிமை விடயங்கள், குறிக்கோளும் தொழிற்பாடும், நிறுவனக் கட்டமைப்பு, தொழிற்பாட்டுக் கட்டமைப்பு, சமூக அபிவிருத்தி தொடர்பாக அமைச்சின் கண்ணோட்டம் ஆகிய விடயங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளன. இரண்டாவது பகுதியான அமைச்சின் கீழ்வரும் திணைக்களங்களும் நிறுவனங்களும் என்ற பகுதியில் சமூக சேவைத் திணைக்களம், சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு சேவைகள் திணைக்களம், தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனம் ஆகியவற்றின் செயற்பாடுகள் பற்றி அறிக்கையிடப் பட்டுள்ளது. அமைச்சின் கீழ்வரும் செயலகங்களும் சபைகளும் என்ற மூன்றாவது பகுதியில் சமூகப் பாதுகாப்புச் சபை, அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான தேசிய செயலகம், ஊனமுற்ற ஆட்களுக்கான தேசிய செயலகம், தேசிய இடர் நிவாரண முகாமைத்துவ நிலையம் ஆகியவை பற்றி அறிக்கையிடப்பட்டுள்ளது. இறுதிப்பகுதி செயற்பாடு பற்றியதாகும். இதில் நிதி பௌதிகச் செயற்பாடு- 1998, செயற்றிட்டங்களும் ஒதுக்கீடுகளும்- 1999 ஆகிய அறிக்கைகள் இடம்பெறுகின்றன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 35631).

ஏனைய பதிவுகள்