வு.கிருபாகரன், ஆ.கெங்காதரன்
(மலராசிரியர்கள்). யாழ்ப்பாணம்: தேசிய கல்வியியற் கல்லூரி, கோப்பாய், 1வது
பதிப்பு, 2001. (யாழ்ப்பாணம்: ஹரிகணன் அச்சகம், 424 ஏ, காங்கேசன்துறை
வீதி).
(24), 97 பக்கம், புகைப்படத் தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:
25×17.5 சமீ.
கோப்பாய் பிரதேசத்தில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் தேசிய கல்வியியல் கல்
லூரி நிர்வாகத்தினரால் தமது 1ஆவது ஆண்டு நினைவாக வெளியிடப்பட்ட
முதலாவது ஆண்டிதழ். 02.05.2000 முதல் 30.04.2001 காலகட்டத்தின் முதலாவது
பீடாதிபதி அறிக்கையுடன் மலர் தொடங்குகின்றது. கல்லூரியின் மன்றங்கள்
தொடர்பான குறிப்புகளுடன் தொடரும் படைப்பாக்கங்களாக கல்வியில்
தரக்காப்பீடும் இடர் சிக்கிய மாணவர்களும் (சபா.ஜெயராசா), புதியஆசிரியர்
கல்விக் கலாச்சாரமும் யாழ்ப்பாண தேசிய கல்வியியல் கல்லூரியின் தோற்றமும்
(பா.தனபாலன்), தேசிய கல்வியியல் கல்லூரிகளின் ஒழுங்கமைப்புகளும்
யாழ்ப்பாண தேசிய கல்வியியல் கல்லூரியும் (எஸ். ஆர்.சத்தியேந்திரம்பிள்ளை),
பாடசாலை மட்டக் கணிப்பீடு (ஜெ.சந்திரப்பிரகாசம்), இரசாயன பீடைநாசினிகளின்
பாவனையின் தாக்கங்களும் அதற்கான மாற்று நடவடிக்கைகளும் (சந்திரிகா
நாகேந்திரன்), நம் வாழ்வை வளமாக்கும் கலைகள் (விக்னேஸ்வரி நரேந்திரா),
கரகாட்டம் ஒரு கண்ணோட்டம் (ஞானசக்தி கணேசநாதன்), தேன் தமிழ்
தேயலாமோ? (கௌரி சுரேசன்), அழகியல் தழுவிய விழுமியங்கள் (க.
ரட்ணேஸ்வரன்), பண்டைக்கால இசையும் கூத்தும் (நா.தயாளினி), கணிதக் கல்வி விருத்திக்கு உதவும் பள்ளிப் புறச் செயற்பாடு (மயூரதி மயில்வாகனம்),
தமிழ் அறநூல்களிலிருந்து கல்வி பற்றிய ஓர் கண்ணோட்டம் (அருள்நாதன்
டெய்சி), ஓவியமும் ஜீவியமும் (தேவராஜா பகீரதி), வீணை பேசும் மீட்டும்
விரல்களைக் கண்டு (த.சித்ரா), புரியாத புதிரா? (கு.சுரேந்தினி), கற்றல்
செயற்பாட்டில் புதிய பரிமாணங்கள் ஓர் அனுபவப் பகிர்வு (நடேசன் இரவீந்திரன்),
தட்டிக் கொடுத்தல் (இ.கோகிலஸ்ரீ மாலினி), விலங்குகளின் நடத்தைக் கோலங்கள்
(அ.சியாமளரூபன்), உடற்கல்வியும் ஆளுமை விருத்தியும் (டயாளினி
இராசநாயகம்), அழகியலும் சில ஆய்வுகளும் (எஸ். சுரேஷ்குமார்), பண்பட்ட
கல்வியை புண்படுத்துவதா? (சு.ப.கஜேந்திரன்), பிறப்புரிமையியலில் புதிய
சாதனை ‘குளோனிங்” (சி.சந்திரகுமார்), நடனம் ஓர் தெய்வீகக் கலை
(கதிர்காமத்தம்பி குமாரி ஜசந்தினி), உடற்கல்வி மூலம் உளநல விருத்தியும்
கடமைகளும் (கிரிஜா கந்தசாமி), பாடசாலை கலைத்திட்ட படிம மலர்ச்சியும்
இலங்கையின் புதிய கல்விச் சீர்திருத்தமும் (சுகந்தினி சுப்பிரமணியம்), வளமான
எதிர்காலத்திற்கு தரமான ஆரம்பக் கல்வி (இ.இராஜேஸ்வரன்) ஆகிய தமிழ்
கட்டுரைகளும், உதயமாவாய் மிலேனியமே, கல்லூரித்தாயே வாழ்க பல்லாண்டு,
தூண்டல் வடிக்கும் தூரிகை, உனது புலர்வு, காட்சியும் கவிதையும், சீரிய
சிந்தையுடன் சிறகடிப்போம், இதயத்தின் கீதங்கள் ஆகிய கவிதைகளும், வுhந சுழடந
ழக நுபெடiளா in ளுசi டுயமெய (ளுநடஎயஅயடயச ளுiஎயியவாயஅ)இ வுநயஉhiபெ Pசழகநளளழைn (னுரளாலயவொini
சுயபெயயெவாயn)இ வுhந யுiஅ ழக நுனரஉயவழைn யனெ வாந சழடந ழக ய வநயஉhநச (ளுசi ஏiவாலய முழியடயமசiளாயெ
ஐலநச) ஆகியஆங்கில ஆக்கங்களும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன
இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 040928.