12278 – புதை குழிக்குத் தள்ளும் புகைப்பழக்கம்.

முஹம்மத் ரஸீன்-ஹஸனீ. குருநாகலை: தாருல் குர்-ஆன் வெளியீட்டுப் பணியகம், இல. 100, கண்டி வீதி, மல்லவப்பிட்டிய, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2004. (அச்சக விபரம் தரப்படவில்லை).

56 பக்கம், விலை: ரூபா 60., அளவு: 20.5×14 சமீ., ISBN: 955-8734-04-7.

புகைத்தலிலிருந்து விடுதலைபெற விளையும் அனைத்து வயதினரையும் நல்வழிப்படுத்தும் ஓர் அழகிய வழிகாட்டி. புகைத்தல், புகையிலை மற்றும் சிகரெட் புகை ஒரு அபாயம், புகைத்தல் தரும் பரிசு (தொண்டைப்புற்று நோய், நுரையீரல் புற்றுநோய், இதய நோய்கள், மூளை நோய்கள், நுரையீரல் நோய்கள், வயிற்றுப்புண், ஓரினப் புணர்ச்சி, மலட்டுத் தன்மை), புகைப்பவனுக்கு 24 வகையான பரிசுகள், புகைப்பழக்கமும் இளைய சமூகமும், புகைப் பழக்கமும் பெண்களும், புகைப்பழக்கத்தில உலக நாடுகள் (சீனா, ஜப்பான், இந்தியா, இலங்கை), இலங்கையின் நிலவரம், புகைப்பழக்கத்தில் உலகம், புகைத்தலைப் பற்றி குர் ஆன், அகிலத்தாருக்கு இஸ்லாம் கூறும் அறிவுரைகள்-1-6, என இன்னோரன்ன 40 தலைப்புகளில் சிறு கட்டுரைகளின் வடிவில் இந்நூல் விளக்கப் பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 38657).

ஏனைய பதிவுகள்