மலர்க் குழு. கொழும்பு 4: கொழும்பு இந்துக் கல்லூரி, 1வது பதிப்பு, ஜுன் 2001. (கொழும்பு: ஏ.எஸ்.சற்குணராஜா, எஸ்.பிரின்ட்).
ix, 120 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14 சமீ.
கொழும்பு இந்துக் கல்லூரியின் 2001 காலகட்ட சூழற் காப்பு ஒன்றியத்தின் இணைச்செயலாளர்களாக ஏ.சிவகுமார், ஏ.சஞ்ஜயன் ஆகியோர் பணியாற்றி யுள்ளனர். சமூக உணர்வுடன் சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் பாடசாலை மட்டத்தில் செயற்திட்டங்களை முன்னெடுத்து வந்த இவ்வமைப்பினர் உலக சூழல் பாதுகாப்புத் தினத்தை முன்னிட்டு 6.6.2001அன்று கல்லூரி மண்டபத்தில் ஒழுங்கு செய்திருந்த விழாவின்போது வெளியிடப்பட்ட சிறப்பிதழ் இதுவாகும். மாணவர்களாலும் ஆசிரியர்களாலும் எழுதப்பெற்ற சூழல் பாதுகாப்பு சார்ந்த விழிப்புணர்வுக் கட்டுரைகள் இம்மலரின் ஆசியுரை, அறிக்கைகளுக்கு இடையே இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 22212).