ஹிலறி குறூஸ் (ஆங்கில மூலம்), கணபதிப்பிள்ளை சச்சிதானந்தன் (தமிழாக்கம்). கொழும்பு 12: சுதந்திரன் வெளியீடு-5, 194 ஏ, பண்டாரநாயக்க வீதி, 1வது பதிப்பு, ஆனி 1975. (கொழும்பு 12: சுதந்திரன் அச்சகம், 194 ஏ, பண்டாரநாயக்க வீதி).
(8), 30 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 2.00, அளவு: 21X14 சமீ.
பேராசிரியர் ஹிலறி குரூஸ் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் பேராதனை வளாகத்தில் விலங்கியல்துறைத் தலைவராகப் பணியாற்றிய வேளையில் வெளியிடப்பெற்ற நூல். தமிழர் கல்வி பற்றி அவ்வப்போது இவர் ஆங்கிலத்தில் ஆற்றிய உரைகளின் தேர்ந்த பகுதிகள் இங்கு தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன. ‘யாழ்ப்பாண வளாகம்-சில சிந்தனைகள்’ என்ற முதலாவது உரை முன்னர் எங்கும் பிரசுரமாகியிருக்கவில்லை. இரண்டாவதாக உள்ள ‘பல்கலைக்கழகத்தின் நோக்கங்கள்’ என்ற கட்டுரை மார்க்கா நிறுவனத்தின் ஆய்விதழான The Marga Journal (Volume 2, No.3, 1974) இல் பிரசுரிக்கப்பட்டது. மூன்றாவது உரை ‘உயர்நிலை விஞ்ஞானக் கல்வியின் நோக்கும் போக்கும்’ என்பதாகும். இது Proceedings of the Twenty-sixth Annual Sessions of the Ceylon Association for the Advancement of Science என்ற கருத்தரங்க ஏட்டில் 1971இல் பிரசுரமானதாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2890).