மக்கள் சமாதான இலக்கிய மன்றம். மாத்தறை: மக்கள் சமாதான இலக்கிய மன்றம், 52டB, தர்மரத்ன மாவத்தை, 1வது பதிப்பு, ஜனவரி 1996. (மஹரகம: தரஞ்ஜீ பிரின்ட்ஸ், 506, ஹைலெவல் வீதி, நாவின்ன).
vi, 96 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21 x 14 சமீ., ISBN: 955-9430- 02-5.
தெனகம சிரிவர்த்தன மன்றத்தின் செயலாளராகப் பணியாற்றிய வேளையில், மக்கள் சமாதான இலக்கிய மன்றத்தினரால் மும்மொழிகளிலும் நடாத்தப்பட்ட ‘சமாதானம்’ என்ற கருத்தியலில் எழுதப்படும் சிறுகதைப் போட்டிக்கென கிடைக்கப்பெற்ற சிறுகதைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில சிறுகதைகளின் தொகுப்பு இது. தேர்வுக்குழுவின் நடுவர்களாக ரஞ்சித் பத்திரன, ரத்னஸ்ரீ விஜேசிங்க, எஸ்.ஜீ.புஞ்சிஹேவா, ஜீ.ஜீ.சிறிசேன, யோ.பெனடிக்ற் பாலன், சோ.ரஞ்சகுமார், மு.பொன்னம்பலம்ஆகிய இலக்கியகர்த்தாக்கள் பணியாற்றினர். பாதை தவறாமல் (சோ.ராமேஸ்வரன்), நிகழ்கால நிதானங்கள் (கே.குணநாதன்), கடவுளின் குழந்தைகள் (இரா.பரமேஸ்வரன்), மனிதம் (எம்.பி.சிராஜ்டீன்), ஏன் இந்த நிலை (இர்‡பானா ஜெப்பார்), பேதமில்லா நெஞ்சங்கள் (எஸ்.இலங்கேஸ்வரன்), எனக்குள் உதிர்ந்த அவன் (எஸ்.எச்.அர‡பத்), நேசத்துள் ஒரு தேசம் (அக்குறணை எம்.நஸுபர்), தியாகதீபம் (பாக்கியராஜன் அனுராதா), மதம் (எம்.எச்.எம்.ஷம்ஸ்) ஆகிய தேர்வுபெற்ற சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. (இந் நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 19304).