சோ.சந்திரசேகரம். கொழும்பு 6: உமா பதிப்பகம், 521/1டீ, காலி வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2004. (கொழும்பு 12: பேர்பெக்ட் பிரின்டர்ஸ், 130, டயஸ் பிளேஸ்).
(6), 136 பக்கம், விலை: ரூபா 175., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 955-98551-0-7.
கொழும்புப் பல்கலைக்கழகத்தின் கல்வியியல் பேராசிரியரான சோ.சந்திரசேகரன் அவர்கள் எழுதிய 20 கல்வியியல் சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பு இது. கல்வித் தராதரங்கள் பற்றிய ஒரு நோக்கு, தொழிற் கல்விச் சிந்தனைகள், கல்விச் சிந்தனையும் செயற்பாடும், தென்கிழக்காசிய நாடுகளின் கல்வி வளர்ச்சி, புதிய ஆராய்ச்சி நெறிமுறைகள், புனர்நிர்மாண அபிவிருத்திக்கான கல்வி, புதிய பாடசாலைக் கணிப்பீட்டுமுறை, நவீன கல்வியும் சுதேச அறிவுப் பாரம்பரியமும், வகுப்புகள் அற்ற பாடசாலைகள், பெண்கல்வியும் அபிவிருத்தியும், தென்னாசியா வில் கல்வியின் வீழ்ச்சி, கட்டாய ஆரம்பக் கல்வியின் அவசியம், பாடசாலைகளில் எதிர்காலவியல் பாடம், படைப்பாற்றல் பற்றிய சில கருத்தோட்டங்கள், புதிய கல்விச் சிந்தனைகள், இலங்கையில் தகவல் தொழில்நுட்பம், இலங்கையின் கல்விமுறையில் தமிழ்வழிக் கல்வி, கல்வி வரலாற்றில் இரு புரட்சிகள், எதிர்காலவியல் நோக்கில் மேலைநாட்டுக் கல்வி, சுதந்திர இலங்கையின் கல்வி வளர்ச்சி ஆகிய விடயங்களை இதிலுள்ள இருபது கட்டுரைகளும் அலசுகின்றன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 32858).