12299 – கல்வி பயிற்றலின் அத்திவாரம்.

எச்.எஸ்.பெரேரா. மதராஸ்: லாங்மன்ஸ் க்ரீன் அண்ட் கம்பனி லிமிட்டெட், 36 ஏ, மௌன்ட் ரோட், 1வது பதிப்பு, 1932. (மதராஸ்: எவிரிமான் பிரஸ்).

xii, 112 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12 சமீ.

கல்வியியல்துறையில் ஈடுபடுவோருக்கான அடிப்படை அறிவை ஊட்டும் வகையில் தயாரிக்கப்பட்ட கைநூல். மாணவனது இயற்கை உபகரணங்கள் (வல்லபங்கள், மூல ஆசைகள், மெய்ப்பாடுகள், புலன்கள்), கவர்ச்சிகளும் ஆசைகளும் (காட்சிப் பொருள்களிற் கவர்ச்சி, மூல ஆசைகள் வழியாக வரும் கவர்ச்சி, விளையாட்டு, பின்பற்றுதல், சமூக சம்மதம், சித்தியும் இகலும், நெருக்குதலும் அதன் தீமைகளும், அச்சத்தை தக்க வழியிலும் தகாத வழியிலும் உபயோகித்தல், நோக்கம், யத்தனம், தடைகள்), மாணவரது இருப்பெண்ணங்கள் (சொற்களும் எண்களும், பாலப் பருவத்து எண்ணங்களும் சொற்களும், எண்களின் விருத்தி, அறிந்ததைக்கொண்டு அறியாததை விளங்குதல், எண்ணங்கள் விருத்தியாகும் படிகள்), புதிய எண்ணங்களின் வளர்ச்சி (புதியனவற்றை மட்டிடல், பொது எண்ணங்களும் சிறப்பெண்ணங்களும், விளக்குதல், வரைவிலக்கணம், காட்டு, விவரணப் பாகுபாடு, புதிய எண்ணத் தோற்றம், மெய்பாட்டுச் சேர்க்கை, விளக்குதலில் வரும் பிழைகள்), பிழை (மட்டிடற் குறை, கவர்ச்சிக் குறை, களைப்பும் பொறிகளிலுள்ள குறைகளும், மீட்டற்குறை, விவரணப் பிழைகள், வரைவிலக்கணப் பிழைகள், காட்டுப் பிழைகள்), அறிவு விருத்தியடையும் வகை (விசார விஷயம், கவர்ச்சி, சுய முயற்சி, சொல்லலும் வினாதலும், கூட்டுவேலை, தனிவேலை), பயிற்சியும் பரீட்சையும் (பயிற்சியின் தன்மை, பயிற்சியின் வகைகள், பயிற்சியின் நோக்கம், பயிற்சியின் அளவு, பயிற்சியின் எல்லை, பிழை திருத்தம், பரீட்சித்தல்), பிரயோகம் அல்லது அறிவின் தொழிற்பாடு (பிரயோகத்தின் நோக்கம், சுவாதீனம், உணர்ச்சியும் பயிற்சியும், கணிதம், சாஸ்திரம், சரித்திரம், பூமி சாஸ்திரம், இலக்கியம், மொழிகள், பிரயோகம்), பிரயோகம் (பள்ளிப் பாடத்தின் நோக்கம், உபயோகப் பயன், அறிவுப் பயன், அறிவும் செயலும், பாடசாலையின் நோக்கம், இன பேதங்கள், புற அதிகாரம்), கற்கும் விதிகள் (நோக்கம், கற்றலின் படிகள், விதிகள், முதல் விதி, இரண்டாம் விதி, மூன்றாம் விதி), உளநூற் கல்விநூற் பதங்களின் அகராதி ஆகிய அத்தியாயத் தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 002561).

ஏனைய பதிவுகள்

Best Online slots

Posts Form of On the internet Slot machines And Video game Game Quality, Quantity, And Range Just how do The newest Betting Requirements Performs? A