எம்.செல்வராஜா. மஹரகம: கல்வி முகாமைத்துவ அபிவிருத்தி ஆலோசனைக் கழகம், கௌரி வெளியீட்டு இல்லம், 1வது பதிப்பு, 1993. (கொழும்பு 11: இராஜேஸ்வரி அச்சகம், 18, பிரின்ஸ் வீதி).
44 பக்கம், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×12.5 சமீ.
தமிழ்மொழி மூலப் பாடசாலை அதிபர்கள், உப அதிபர்கள், பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள் ஆகியோர், கல்வி முகாமைத்துவம் பற்றிச் சுயமாகப் படித்துத் தமது முகாமைத்துவத் திறனை வளர்ப்பதற்கேற்ற வகையில் நேர முகாமைத்துவம் (நேரத்தைப் பயன்படுத்த சில அறிவுறுத்தல்கள், நேரப்பயன்பாட்டுக்கான திட்டங்கள், நாளாந்த வாராந்த மாதாந்த வருடாந்த திட்டங்கள், கடந்த காலத்தை மீளாய்வு செய்தல், நேரத்தை திருடுவன), பாடசாலைகளில் கூட்டங்களை நடாத்துதல் (தலைவரிடம் இருக்கவேண்டிய பண்புகள், கூட்டத்திற்குப் பின், கூட்ட மண்டப ஒழுங்கு), இலக்கு அடிப்படை முகாமைத்துவ விஞ்ஞானம் – MBO (கருத்தின் தோற்றம், வரைவிலக்கணம், MBO வினைப் பயன்படுத்துவதற்கான காரணம், முயற்சியின் நிலைப்பு, நிறுவனத்தின் இலாப அடைவினை அதிகரித்தல், வாடிக்கையாளர்களது திருப்தி, வளர்ச்சிக்கான நெறியை அமைத்தல், பணியாட்களின் திருப்தி, தொழில்நுட்பவிருத்தி, நிறுவனத்தின் சமூகப் பங்களிப்பு, MBO முகாமைத்துவத்தின் பிரதான தத்துவங்களும் கல்விப் பிரச்சினைகளுக்கு அதன் பிரயோகங்களும், இலக்குகளை அமைத்தல், செயற்றிட்டம், முகாமைத்துவ அபிவிருத்தி, ஊக்குவித்தல், MBO வில் தொடர்புறும் பிரச்சினைகள்) ஆகிய அலகுகளை இந்நூல் விளக்குகின்றது. மா.செல்வராஜா மஹரகம தேசிய கல்வி நிறுவனத்தில் கல்வி முகாமைத்துவ அபிவிருத்தித் துறையின் செயற்திட்ட அதிகாரியாகப் பணியாற்றுகின்றார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 35305, 14743).