12815 – வசந்தகால நினைவுகள்: சிறுகதைத் தொகுதி.

கே.ஈஸ்வரலிங்கம். கொழும்பு 14: சினிலேன்ட் வெளியீடு, 13, சென்.ஜோசப் வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 1994. (கொழும்பு 14: நிரோஷன் பிரிண்டர்ஸ்).

36 பக்கம், விலை: ரூபா 40., அளவு: 19 x 15 சமீ.

கொழும்பு 14, பாபா பிள்ளை பிளேசைச் சேர்ந்தவரான கே.ஈஸ்வரலிங்கம், 1984 முதல் 1994 வரையிலான பத்தாண்டு காலத்தில் தான் எழுதிய ஐந்து சிறுகதைகளை இத்தொகுதியில் தந்துள்ளார். சித்திரா வந்தாள், கனவுகள் கரைவதில்லை, உறவு, சலனம், ராசிக்காரன் ஆகிய ஐந்து கதைகள் இதில் அடங்கியுள்ளன. கணவன்- மனைவி குடும்ப நலம் கூறும் ராசிக்காரன், சலனம் ஆகிய கதைகளும், ஆண்- பெண் உறவு என்றால் பாலியல் ரீதியானது மட்டுமே அல்ல. மாறாக, சகோதர பாசமும் அதில் உண்டு என்பதைக் காட்டும் உறவு என்ற கதையும், சீதன மாலைக் காகத் தாலி கட்டத் தயங்கியவனுக்கு கழுத்தை நீட்ட மறுக்கும் மணப்பெண்ணின் கதையான கனவுகள் கரைவதில்லை என்ற கதையும், தமிழ் சினிமாக் காட்சிப் படிமங்களாக வாசகர் மனதில் தோற்றம் பெறத்தக்கவை. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 21697).

மேலும் பார்க்க: 12866

ஏனைய பதிவுகள்

14387 வணிகக் கல்வி: இன்றைய வாணிப நடைமுறை.

வி.சிவா (இயற்பெயர்: வி. சிவானந்தபாலன்). கொழும்பு 6: வி.சிவானந்தபாலன்இ 1வது பதிப்புஇ ஆண்டு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு 6: கார்த்திகேயன் வெளியீட்டகம்இ 501/2, காலி வீதி, வெள்ளவத்தை). (8), 108 பக்கம்இ விலை: குறிப்பிடப்படவில்லைஇ