12312 – கல்வியியல்: ஓர் அறிமுகம்.

ச.முத்துலிங்கம். யாழ்ப்பாணம்: வி.சதாசிவம், கீதாஞ்சலி, நல்லூர், 1வது பதிப்பு, செப்டெம்பர் 1974. (யாழ்ப்பாணம்: ஆசீர்வாதம் அச்சகம், 32 கண்டி வீதி).

(8), 322 பக்கம், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21X14 சமீ.

கல்விக் கோட்பாடுகள் (கல்விச் சிந்தனையாளர் சிலரின் கருத்துக்கள், கல்வியும் பொருளாதாரமும், கல்வியும் சமூகமும், கலைத்திட்டமும் அதன் வகைகளும், சமயக்கல்வி), உளவியல் (ஊக்கம் பற்றிய கொள்கைகள், பிள்ளை வளர்ச்சிப் பருவங்கள், பிள்ளைகளின் பொருத்தப்பாடு, எண்ணக்கருவும் சிந்தனையும், அறிவு வளர்ச்சி), கற்றலும் கற்பித்தலும் (கற்றலும் ஊக்கமும், கற்பித்தற் பொது முறைகள், ஸ்கின்னரின் கொள்கையும் நிரலித்த கற்பித்தலும், வகுப்பறைக் கற்பித்தல்), அளவீடும் வழிகாட்டலும் (பாட அடைவும் அதன் அளவீடும், நுண்மதியும் அதன் அளவீடும், ஆளுமையும் அதன் அளவீடும், தொழிலுக்கு வழிகாட்டல், கூட்டு வழிகாட்டல்), கல்வி முறை (சுதந்திரத்தின் பின் இலங்கையில் கல்வி மாற்றங்கள், இலங்கையிற் புதிய கல்வித் திட்டம், இங்கிலாந்தின் கல்வி முறை) ஆகிய ஐந்து பாகங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. நூலாசிரியர் சதாசிவம் முத்துலிங்கம் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் பேராதனை வளாகத்தின் கல்வியியல்துறை விரிவுரையாளராவார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 34443. நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தின் சேர்க்கை இலக்கம் 017268).

ஏனைய பதிவுகள்

12716 – ஆரோக்கியம் தேகப்பயிற்சி.

உடுவில் வே.மு.சபாரத்தினசிங்கம். யாழ்ப்பாணம்: சைவ பரிபாலன சபை, வண்ணார்பண்ணை, 3வது பதிப்பு, 1958, 1வது பதிப்பு, 1948, 2வது பதிப்பு, ஒக்டோபர் 1948 (யாழ்ப்பாணம்: ம.வே.திருஞானசம்பந்தன், சைவப்பிரகாச யந்திரசாலை, வண்ணார்பண்ணை). (2), 108 பக்கம்,