சபா ஜெயராஜா. கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 11: சேமமடு பதிப்பகம்).
vi, 126 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-685-049-9.
பல்வேறு கோணங்களில் இருந்து எழுச்சிபெற்ற தமிழர் கல்விச் சிந்தனைகள் இந்நூலில் விரிவாக இடம்பெற்றுள்ளன. தமிழ்த் தேசிய உருவாக்கத்தில் கல்விச் சிந்தனைகளின் வகிபாகத்தைக் கண்டுகொள்வதற்கும் இந்நூல் துணைசெய்கின்றது. தமிழரின் தொன்மையான பொருள்முதல்வாதக் கல்விக்கோட்பாடு-ஆசீவகம், தொல்காப்பியமும் மனவெழுச்சிக் கல்விச் சிந்தனைகளும், தமிழ்மரபில் தாந்திரீகக் கல்வி, சமணக் கல்விச் சிந்தனை, சித்தர் கல்விச் சிந்தனை, தமிழர் கல்வியும் அளவை முறையும், அறக் கல்விச் சிந்தனை, அழகியற் கல்விச் சிந்தனை, திருமூலரின் கல்விச் சிந்தனை, திருக்குறள் வழி எழும் கல்விச் சிந்தனை, மணிமேகலை வழி மேலெழும் பௌத்த கல்வி, திறனாய்வுக் கல்வி, வைசேடிகக் கல்வி, சாங்கியக் கல்வி, சைவக்கல்வி, இராமானுசரின் கல்விச் சிந்தனை, தொழில்நுட்பக் கல்வி, நாவலரின் கல்விச் சிந்தனை, விபுலானந்த அடிகளாரின் கல்விச் சிந்தனை, சமகாலக் கல்வி, பிற்குறிப்பு ஆகிய 21 அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 62226).