ஓ.ஆறுமுகம், பி.சுதந்திரராஜா, ஆர்.ஸ்ரீகாந்தன், சந்திரா குமாரசுவாமி. கல்கிஸ்சை: இலங்கை தொழிலாளர் கல்வியாளர்களின் சங்கம், இல.7, சேர்கியூலர் வீதி, 1வது பதிப்பு, ஜுலை 1991. (கொழும்பு: வரையறுக்கப்பட்ட மெக்லீன் அச்சகம்).
(8), 179 பக்கம், விளக்கப்படங்கள், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 23.5×16 சமீ.
இலங்கையில் தொழிலாளர் கல்வி மேம்பாட்டுக்காக தயாரிக்கப்பட்ட இப்புத்தகம், சர்வதேச தொழிலாளர் தாபனத்தினால் ஆங்கில மொழியில் வெளியிடப்பட்டுள்ள ‘Workers Education and its Techniques’ என்னும் நூலை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இந்தக் கையேடு அந்த நூலை மூலமாகக் கொண்டு தேசிய ரீதியாக தொழிலாளர் கல்வித் தேவைகளுக்குப் பொருந்தக்கூடிய வகையிலான தேவையான அம்சங்களை எடுத்துத் தயாரிக்கப்பட்டுள்ளது. அவ்வகையில், நோக்கம், தொழிலாளர் கல்வியின் விரிவெல்லை, உள்ளடக்கம், பயிற்றுவிப்போர், அமைப்பாளர்கள், வெளியார் உதவி, மாணவர்கள், காலமும் இடமும், வளர்ந்தோரும் கற்றல் செயல்முறையும், நுட்பங்கள், கருவிகளும் பொருட்களும் ஆகிய பதினொரு இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 39062. நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தின் சேர்க்கை இலக்கம் 014797).