12835 – தமிழ் ஆய்வுச் சிந்தனைகள்: மொழி-இலக்கியம்-பண்பாடு.

பொ.பூலோகசிங்கம் (மூலம்), முருகேசு கௌரிகாந்தன் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xx, 362 பக்கம், விலை: ரூபா 750., அளவு: 22 x 14.5 சமீ., ISBN: 978-955-659-553-6.

பேராசிரியர் பொ.பூலோகசிங்கம் அவர்கள் தமிழியல் ஆய்வில் மிகுந்த ஆர்வமும் ஆழ்ந்த புலமையும் கொண்டவர். இவரால் எழுதப்பட்ட 37 கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. ஈழத்து இலக்கிய வரலாறு, தமிழக இலக்கிய வரலாறு, மொழியியல், சமயம், தத்துவம், பண்பாடு எனும் விடயங்களை சம்பந்தப்பட்ட உள்ளடக்கங்களை இந்நூலில் உள்ள கட்டுரைகள் கொண்டுள்ளன. பேரா.பூலோகசிங்கம் வவுனியா செட்டிகுளத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். யாழ்.சம்பத்திரிசியார் கல்லூரியின் பழைய மாணவர். இலங்கைப் பல்கலைக் கழகத்தின் பேராதனை வளாகத்தில் தமிழைச் சிறப்புப் பாடமாகக் கற்று 1961இல் முதல்வகுப்பில் சித்தியெய்தியவர். இலங்கைப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளராக 1965இல்இணைந்து கொழும்பு, களனிப் பல்கலைக்ககழகங் களிலும் நிறைவாக, பேராதனைப் பல்கலைக்கழகத்திலே 1997இல் இணைப் பேராசிரியர் பதவியை விட்டு விலகும்வரை பணியாற்றியவர். இலங்கை அரசினால் வழங்கப்பெறும் ‘கலாகீர்த்தி’ பட்டத்தை 1993இல் பெற்றவர். இந்நூலின் பதிப்பாசிரியர் மு.கௌரிகாந்தன் பேராதனைப் பல்கலைக்கழகத்திலே முதுகலைமாணிப் பட்டத்தினையும் கொழும்புப் பல்கலைக்கழகத்திலே பட்டப்பின் கல்வி டிப்ளோமா பட்டத்தையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலே முதுகல்விமாணிப் பட்டத்தையும் பெற்றவர். யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் சிரேஷ்ட விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார்.

ஏனைய பதிவுகள்

13016 இணைகரம்: மாணவர் சிறப்பிதழ்.

வி.கே.ரவீந்திரன் (இதழாசிரியர்). மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டக் கூட்டுறவுச் சபை, பயனியர் வீதி, 1வது பதிப்பு, ஜுலை 2001. (அச்சக விபரம் தரப்படவில்லை).(13), 114 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 30.00, அளவு: 21×14 சமீ.