12326 – நிறைவான கல்விக்கு.

ச.சுப்பிரமணியம். யாழ்ப்பாணம்: கல்விக் கதிர், 342 பருத்தித்துறை வீதி, நல்லூர், 1வது பதிப்பு, ஐப்பசி 1997. (கொழும்பு 14: கோல் குவிக் பிறின்டர்ஸ்).

(4), 117 பக்கம், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21 சமீ.

21 வேலைத்திட்டங்களுடன் இந்நூலாசிரியர் இலங்கையில் ஒரு நிறைவான கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்த முனைகின்றார். இதில் கல்வி அபிவிருத்திக்கான காரணிகள், கல்வி-நோக்கமும் குறிக்கோள்களும், கல்விக் குறிக்கோள்களை இசைவுபடுத்தல், கல்விப் பெறுபேற்றை மதிப்பீடு செய்வதெப்படி?, பொதுக்கல்வி இலக்குகள், பாடவிதான அபிவிருத்தியின் அடிப்படை, தற்போதைய பாடத்திட்டத்தில் உள்ள குறைபாடுகள், கல்விப் பெறுபேற்றை உயர்த்துவதற்கு யாது செய்யலாம்? கல்விப் பிரச்சினைகளை இனங்காணல், மாணவர் தொடர்பாக இனங்காணப்பட்ட பிரச்சினைகள், மாணவர் தொடர் மதிப்பீட்டுத் திட்டம் (திட்டம் 1), ஆக்க முயற்சிப் போட்டி நடாத்துதல் (திட்டம் 2), பின்தங்கிய மாணவர்களுக்கான விசேட ஊக்குவிப்புத் திட்டம் (திட்டம் 3), ஆசிரியர் தொடர்பாக இனம்காணப்பட்ட பிரச்சினைகள், ‘எல்லோரும் சித்தி’ கற்பித்தல் நுட்பம் (திட்டம் 4), ஆசிரியர் சேவை தொடர் மதிப்பீட்டுத் திட்டம் (திட்டம் 5), திட்டமிட்ட ஆசிரியர் சேவைக்காலப் பயிற்சி (திட்டம் 6), முகாமைத்துவம் தொடர்பான அபிவிருத்திகள், முகாமைத்துவம் தொடர்பான பிரச்சினைகள், வகுப்பறை மேற்பார்வைத் திட்டம் (திட்டம் 7), பாடசாலை மேற்பார்வைத் திட்டம் (திட்டம் 8), அதிபர் சேவை தொடர் மதிப்பீட்டுத் திட்டம் (திட்டம் 9), அபிவிருத்தித் திட்டம் வகுத்து நிறுவனத்தை மேம்படுத்துதல் (திட்டம் 10), கோட்டக் கல்விப் பணியாளர் கண்காணிப்புத் திட்டம் (திட்டம் 11), முதன்மையாசிரியர் அபிவிருத்தித் திட்டம் (திட்டம் 12), முதன்மையாசிரியர் சேவை தொடர்பான குறைபாடுகள், முதன்மையாசிரியருக்கான சேவைக்காலப் பயிற்சித்திட்டம் (திட்டம் 13), முதன்மையாசிரியர் சேவையை தொடர் மதிப்பீடு செய்தல் (திட்டம் 14), திட்டமிட்ட ஆசிரியர் பயிற்சித் திட்டம் (திட்டம் 15), முதன்மை யாசிரியருக்கான ஆக்க முயற்சித் திட்டம் (திட்டம் 16), பௌதிக வளம் தொடர்பாக இனம்காணப்பட்ட பிரச்சினைகள், திட்டமிட்ட வளப்பங்கீடு செய்தல் (திட்டம் 17), கல்வி வள நிலையம் அமைத்தல் திட்டம் (திட்டம் 18), சமூகம் தொடர்பாக இனங்காணப்பட்ட கல்விப் பிரச்சினைகள், தவணைக்கொரு தரம் பெற்றார் சந்திப்புத் திட்டம் (திட்டம் 19), சமூக அறிவூட்டல் திட்டம் (திட்டம் 20), புது முயற்சி தொடர்பாக இனம்காணப்பட்ட குறைகள், புத்தாக்க முயற்சி அபிவிருத்தித் திட்டம் (திட்டம் 21), நிறைவுரை ஆகிய 41 அத்தியாயத் தலைப்புகளில் இந்நூல் விரிவான ஆலோசனைகளுடன் வெளியிடப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 39204).

ஏனைய பதிவுகள்

‎‎slotomania Slots Host Game To the Software Store/h1>