12327 – பயிற்று மொழியாக மீண்டும் ஆங்கிலம்: ஒரு விளக்கநிலை நோக்கு.

சோ.சந்திரசேகரம், மா.கருணாநிதி. கொழும்பு 7: அகவிழி வெளியீடு, 3, டொறிங்டன் அவெனியூ, 1வது பதிப்பு, டிசம்பர் 2006. (கொழும்பு 6: டெக்னோ பிரின்ட், 55, ஈ.ஏ.குரெ மாவத்தை).

96 பக்கம், விலை: ரூபா 125.00, அளவு: 21×15 சமீ.

அறிமுகம், இந்நூலின் நோக்கங்கள், இலங்கையில் ஆங்கிலக் கல்வி: ஒரு வரலாற்று நோக்கு, மீண்டும் பயிற்றுமொழியாக ஆங்கிலம், முடிவுரை ஆகிய பிரதான ஐந்து இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. பின்னிணைப்புகள் என்ற பெயரில் போதனாமொழி மாற்றத்தின் பின்னணி, பாடசாலைகளில் தாய்மொழிக் கல்வி வெற்றிபெற்றுள்ளதா?, மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் பயிற்றுமொழிப் பிரச்சினை, முடிவுரை என இந்நூல் மேலதிக தகவல்களை உள்ளடக்கியுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 47701).

ஏனைய பதிவுகள்

Black- sky vegas app for pc jack Game

Posts Bonus Blackjack Invited Incentive The basics of Online Black-jack Locating the best Black-jack Web site Perfect Pairs Black-jack A much better problem than downright

14145 நல்லை குமரன் மலர் 1998.

நல்லையா விஜயசுந்தரம் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சைவசமய விவகாரக்குழு, யாழ்ப்பாண மாநகராட்சி மன்றம், 1வது பதிப்பு, 2006. (யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம், 430, காங்கேசன்துறை வீதி). (12), 108 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை,

14331 தொழில் சட்டங்கள்: இலகுவான முறையில்.

சாறுக்க சமரசேகர. கொழும்பு 3: நீதி நியாயத்தை சமமாக அணுகும் கருத்திட்டம், 4ஆவது மாடி, இல. 310, காலி வீதி, 1வது பதிப்பு, 2008. (மஹரகம: தரஞ்ஜி பிரிண்ட்ஸ், இல. 506, ஹைலெவல் வீதி,