லொறேன் பறோஸ் (ஆங்கில மூலம்), சபா.ஜெயராசா (தமிழாக்கம்). யாழ்ப்பாணம்: பகவான் ஸ்ரீ சத்திய சாயி சேவா நிலையம், பிள்ளையார் கோவிலடி, தாவடி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1992. (கொழும்பு 13: ஸ்பார்ட்டன் பிரின்ட்ஸ், 154, Wolfendhal Street).
(8), 136 பக்கம், விலை: ரூபா 80.00, அளவு: 21.5×14 சமீ.
பகவான் ஸ்ரீ சத்தியசாயி பாபாவுடைய அருள் உரைகளில் இருந்து தேர்ந்த வரிகள் இவை. ஆங்கில மொழியில் முன்னர் Loraine Burrows அவர்கள் எழுதிய நூலின் தமிழாக்கம். ஆங்கில மூல நூலை தாய்லாந்திலுள்ள சத்திய சாயி நிறுவனம் அச்சிட்டு வெளியிட்டிருந்தது. கல்வியின் நோக்கம், ஆசிரியரின் பங்கு, மாணவரின் கடமை, இலட்சிய மாதர் இயல்பு, சிறுவர்களுக்கு அறிவுரை, பெற்றோரின் வழிகாட்டல், சாயி ஆன்மீகக் கல்வி, மேற்கோள்கள் ஆகிய 8 பகுதிகளில் இந் நூல் கல்வியியல் சார்ந்த ஆன்மீகத் தத்துவங்களையும் அறிவுரைகளையும் கொண்டதாகத் தொகுக்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 34593).