12336 – முன்பள்ளி ஆசிரியர் பயிற்றுநர் கைநூல்.

வெளியீட்டுக் குழு. திருக்கோணமலை: ஆரம்பப் பிள்ளைப் பருவ அபிவிருத்திப் பிரிவு, கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை, இளைஞர் விவகார அமைச்சு, 1வது பதிப்பு, 2002. (திருக்கோணமலை: பதிப்பத் திணைக்களம், வடக்கு கிழக்கு மாகாண அரசு).

vi, 340 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28.5×22 சமீ.

இப்பயிற்றுநர் கைநூலில் ஒவ்வொரு தலைப்புக்குமான அறிமுகத்துடன் பயிலுநர் அடையவேண்டிய குறிக்கோள்களும் வரையறுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட குறிக்கோளை பயிலுநர் அடைவதற்கு வழிப்படுத்தும் செயற்பாடுகள், பொருத்தமான பின்னணித் தகவல்களுடன் தெளிவாக வழங்கப்பட்டுள்ளன. குழந்தை உளவியல், பிள்ளை வளர்ச்சியும் அபிவிருத்தியும், பிள்ளையின் இயல்பும் கற்கும் முறையும், ஆக்கத்திறன் விருத்தி-சித்திரம், ஆக்கத் தொழிற்பாடு-சங்கீதம், மொழி விருத்தி, கணித விருத்தி, சூழலைப் புரிந்துகொள்ளல், உடல் விருத்திச் செயற்பாடு கள், கற்றல் நிலையங்கள், முன்பள்ளியின் முகாமைத்துவமும் நிர்வாகமும், ஒருங்கிணைந்த அணுகுமுறை, முன்பள்ளி ஆசிரியர் பெற்றோர் தொடர்பு, சிறுவர் உரிமைகள், சுகாதாரமும் போசாக்கும் முதலுதவியும் ஆகிய 15 இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 43616).

ஏனைய பதிவுகள்