த.கலாமணி. அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, மார்கழி 2016. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி).
viஇ 110 பக்கம், விலை: ரூபா 280., அளவு: 20.5 x 14.5 சமீ., ISBN: 978-955-4676-50-3.
பல்வேறு ஊடகங்களிலும் அவ்வப்போது வெளியான கலாநிதி த.கலாமணி அவர்களின் பத்துக் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூலாகும். சமயம், இலக்கியம், கல்வி, உளநலம், நாடகம், சமூகம் சார்ந்த கட்டுரைகள் இத்தொகுப்பில் அடங்கியுள்ளன. ஆய்வின் அடிப்படையில் எழுதப்பெற்றுள்ள இக்கட்டுரைகளில் அடங்கியுள்ள கருத்துக்கள் அவ்வத்துறைசார்ந்து முக்கியமானவையாகவும் தெளிவானவையாகவும் அமைந்துள்ளன. ‘மனதற்ற நிலை’ வேண்டிய தாயுமானவர் சுவாமிகள், உதித்தனன் உலகம் உய்ய, ஜப்பானிய ஹைக்கூ கவிதை மரபை விளங்கிக் கொள்ளல், யாழ். மாவட்ட இலக்கியங்களில் பின் நவீனத்துவத்தின் தாக்கம், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான கல்வி ‘போலொ பிறெய்றி’யின் சிந்தனைகள் பற்றிய சில குறிப்புகள், முதியவர்களின் உளநலம்: பேசப்பட வேண்டிய பொருளொன்றுக்கான முகவுரை, விஞ்ஞானக் கல்வியும் மொழியும்: ஒரு முன்னோட்டம், ஸ்பெஷல் நாடகம்: சில சிந்தனைகள், மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வதிரி பூவற்கரைப் பிள்ளையார் ஆலய விருத்தி பற்றிய ஒரு சமூகசவியற் பார்வை, வடமராட்சி வடக்குப் பிரதேச இலக்கியப் பாரம்பரியம்: குறிப்பான ஆளுமைகளும் சில அவதானிப்புகளும் ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன.