12337 – முன்பள்ளிக் கல்விக் கற்றற் செயற்பாடுகள்.

ச.அருளானந்தம். வெல்லம்பிட்டிய: மக்ஸ்ப்ரோ பப்ளிக்கேஷன்ஸ், 1வது பதிப்பு, மே 2012. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1/14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).

(6), 74 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 250., அளவு: 29×20.5 சமீ., ISBN: 978-955-0984-08-4.

3-5 வயது முன்பள்ளிக் கலைத்திட்டம், செயற்பாட்டுப் பூங்காவின் பயன்பாடு, கற்றல் வட்டம், தன்னிச்சையானதும் சுதந்திரமானதுமான விளையாட்டு, வகுப்பறையில் கற்றல் நிலையங்கள், வளப் பயன்பாடு, மாதிரிக் கால அட்டவணை, ஒருங்கிணைந்த கற்றல் அணுகுமுறை, முன்பள்ளி ஆசிரியரின் நடிபங்கு, உடலபிவிருத்தி, அறிவாற்றல் அபிவிருத்தி, மொழி விருத்தி, கணித விருத்தி, சூழலைப் புரிந்துகொள்ளல், ஆக்கச் செயல் விருத்தி, ஆக்கச் செயலில் சித்திரத்தின் பங்கு, சித்திரம், இசை/சங்கீத/நடன/ நாடகச் செயற்பாடுகள் ஆக்க விருத்தியை விரிவுபடுத்துகின்றன. மனவெழுச்சி விருத்தி, சமூக மனவெழுச்சி விருத்தி, மனவடுக்களுக்ககுள்ளான பிள்ளைகளை இணைத்துக்கொள்ளல், செயற்பாட்டுப் பதிவு மாதிரிப் படிவம் ஆகிய அத்தியாயங்களில் முன்பள்ளிகளுக்கான கல்விக் கற்றல் செயற்பாடுகள் பற்றி விளக்கமளிக்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 53655).

ஏனைய பதிவுகள்

12788 – ஈடிப்பஸ் வேந்தன்: கிரேக்க நாடகம்.

சொவக்கிளிஸ் (கிரேக்க மூலம்), மொழிமாறன் (தமிழாக்கம்). கொழும்பு 11: தேசிய கலை இலக்கியப் பேரவை, வசந்தம், 44, 3வது மாடி, மத்திய சந்தைக் கூட்டுத் தொகுதி, இணை வெளியீடு, சென்னை 600002: சவுத் விஷன்,