12842 – தேம்பாவணி இரட்சணிய யாத்திரிகம் இயேசு புராணமாதிய மூன்று கிறித்தவ இலக்கிய நூல்களின் நூல் ஆராய்வு.

ஈழத்துப் பூராடனார் (இயற்பெயர்: க.தா. செல்வராஜகோபால்). கனடா: சீவன் பதிப்பகம், இல. 3, 1292 Sherwood Mills Blvd,Mississauga L5V1S6, Ontario,1வது பதிப்பு, 2009. (கனடா: ரீ கொப்பி, டொரன்டோ).

xxxviஇ 312 பக்கம், விலை: கனேடிய டொலர் 35., அளவு: 21 x 14 சமீ.

தேம்பாவணி, இரட்சணிய யாத்திரிகம், இயேசு புராணம் ஆகிய மூன்று கிறித்தவ இலக்கியங்களையும் விரிவாக ஆய்வுசெய்து தனி நூலாக ஆசிரியர் வழங்கியிருக்கிறார். நான் கண்ட தேம்பாவணி, முதலாவது வீரமாமுனிவரின் தேம்பாவணி, தேம்பாவணி இலக்கிய நூலாராய்வு, தேம்பாவணி நூல் வரலாற்று ஆய்வு, தேம்பாவணி நூல் ஆசிரியர் வரலாறு, தேம்பாவணி நூற்பதிப்பு வரலாற்று ஆராய்வு, தேம்பாவணி நூலடக்கப் பொது ஆராய்வு, தேம்பாவணி முதற் காண்ட ஆராய்வு, தேம்பாவணி இரண்டாம் காண்ட ஆராய்வு, தேம்பாவணி மூன்றாம் காண்ட ஆராய்வு, முடிவுரை பற்றிய ஆராய்வு என தேம்பாவணியின் பல்வேறு கூறுகளையும் தனித்தனி இயல்களாகப் பிரித்து ஆய்வுசெய்துள்ளார். அவ்வாறே இரண்டாவது கிறிஸ்தவக் கம்பனின் இரட்சணிய யாத்திரிகம், இரட்சணிய யாத்திரிக இலக்கிய நூல்ஆராய்வு, இரட்சணிய யாத்திரிக நூலாராய்வு, நூலாசிரியர் வரலாற்று ஆராய்வு, இரட்சணிய யாத்திரிக பருவங்களின் ஆராய்வு, இரட்சணிய நூல் ஆராய்வின் முடிவுரைத் தொகுப்பு எனப்பகுத்து இரட்சணிய யாத்திரிகத்தை ஆராய்ந்துள்ளார். இறுதியாகத் தான் எழுதிய இயேசுபுராணத்தையும் ஆய்வுசெய்துள்ளார். ஈழத்துப் பூராடனாரின் இயேசு புராணம், இயேசு புராண இலக்கிய நூல் ஆராய்வு, இயேசு புராண நூல் நூற்பதிப்பு பற்றிய ஆராய்வு, பரமபிதாப் பருவ நூலாராய்வு, பரமசுதன் பருவம், பரிசுத்தாவிப்பருவ நூலாராய்வு ஆகிய தலைப்புகளில் இவ்வாய்வை மேற்கொண்டு இறுதியில் நூலாராய்வுகளின் முடிவுரை, ஒரு படைப்பாளியின் தகவல் ஆராய்வு ஆகிய இயல்களில் அனைத்தையும் தொகுத்துக்கூறியுள்ளார். அமரர் நா.சா.கதிர்காமத்தம்பி நினைவு நிதிய ஆதரவில் வெளிவரும் இது ஒரு நிழல் வெளியீடு. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 47042).

ஏனைய பதிவுகள்

15365 கமத்தொழில், காணிகள் அமைச்சு-சுதந்திர பொன்விழா நிறைவு மலர் : தொகுதி 1.

ஆசிரியர் குழுச் சபை. பத்தரமுல்ல: கமத்தொழில், காணிகள் அமைச்சு, சம்பத்பாய, 1வது பதிப்பு, பெப்ரவரி 1998. (கொழும்பு 10: கருணாரத்தின அன் சன்ஸ் லிமிட்டெட், 647, குலரத்ன மாவத்தை). xvi, 142 பக்கம், அட்டவணைகள்,

14017 ஆளுமைகளுக்கான விருதுகள்-2019.

ஐபீ.சீ. தமிழ். யாழ்ப்பாணம்: நிராஜ் டேவிட், நிறைவேற்றுப் பணிப்பாளர், ஐ.பீ.சீ. தமிழ், 1வது பதிப்பு, 2019. (யாழ்ப்பாணம்: பிரகபி கிராபிக் டிசைனர்ஸ், இல. 1219, காங்கேசன்துறை வீதி, பூநாறி மடம்). xvi 50 பக்கம்,

14354 நன்றி மறப்போம்.

எஸ்.ஐ.நாகூர் கனி. கொழும்பு 12: மிஹிந்து மாவத்தை முஸ்லிம் மகா வித்தியாலய நலவுரிமைச் சங்கம், 1வது பதிப்பு, டிசம்பர் 1998. (கொழும்பு 12: காயத்திரி அச்சகம், J.L.G.4 டயஸ் பிளேஸ்). 56 பக்கம், விலை: