சமரபாகு சீனா உதயகுமார். பருத்தித்துறை: அமரர் தங்கம்மா முத்துக்கிருஷ்ணன் ஞாபகார்த்த வெளியீடு, பொலிகண்டி, 1வது பதிப்பு, மே 2017. (ஊரெழு: சிறீலட்சுமி பிரின்டர்ஸ், பலாலி வீதி).
xviii, 68 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5 x 14.5 சமீ., ISBN: 978-955-43155-4-3.
இந்நூலில் பழந்தமிழ்ப் பாடல்களில் கணிதம், சிங்ககத்தீவு, ‘கள்’ பெற்ற சிறுவாழ்வு, ஒரு பாடல்-ஒரு குறள்-சில பழமொழிகள், துளிப்பா இலக்கியம், தொடைகள், விவேக கணிதம் ஆகிய ஏழு கட்டுரைகள் அடங்கியுள்ளன. தமிழ் தொடர்பாகவும் தமிழர் தொடர்பாகவும் பல விடயங்களைச் சொல்லிச்செல்லும் ஆசிரியர் பல்வேறு விடயங்களிலும் மரபாகச் சொல்லப்படும் விடயங்களிலிருந்து மாறுபடுகிறார். அதுவே இக்கட்டுரைத் தொகுப்பின் சிந்தனைக்கான திறவுகோல். இன்றைய புதிய தலைமுறை ஆய்வாளர்களுக்கும் முன்மாதிரியாக விளங்கக்கூடியவை இத்தொகுப்பிலுள்ள இவரது கணிதம் தொடர்பான கட்டுரை களாகும். இவை பண்டைய எமது தமிழ்ப் புலவர்களின் அறிவியலில் புலமைத்துவத்தைக் காட்டுவதாக அமைந்துள்ளன.