12846 – புலவர்மணி கட்டுரைகள்.

ஏ.பெரியதம்பிப்பிள்ளை (மூலம்), பெ.விஜயரெத்தினம், இரா.நாகலிங்கம் (தொகுப்பாசிரியர்கள்). திருக்கோணமலை: கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சு, வடக்கு-கிழக்கு மாகாணம், 1வது பதிப்பு, 1998. (திருக்கோணமலை: பதிப்பகத் திணைக்களம், வடக்கு-கிழக்கு மாகாணம்).

(12) 159 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 21.5 x 14.5 சமீ.

புலவர்மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளை அவர்கள் எழுதிய 25 கட்டுரைகளை அவரது மகனார் பெ.விஜயரெத்தினம் அவர்கள், அன்புமணி இரா.நாகலிங்கம் அவர்களுடன் இணைந்து தொகுத்து வெளியிட்டுள்ளார். கட்டுரைகள் சமயம், இலக்கியம், சமூகம், தமிழறிஞர் ஆகிய நான்கு பிரிவுகளுக்குள் அடக்கப்பட்டுள்ளன. சமயம் என்ற பிரிவில் கலித்தொகையின் கடவுள் வாழ்த்து, குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல்கள், ஸ்ரீகாளிகாமடு கற்பகவிநாயகர், சக்தி வழிபாடு ஆகிய கட்டுரைகள் உள்ளன. இலக்கியம் என்ற பிரிவில் இலக்கியமும் சமூக வாழ்வும், வாழ்வாங்கு வாழ வழிகாட்டும் இலக்கியம், கம்பன் நாட்டிய தமிழ் நாகரீகம், அகவாழ்வும் புறவாழ்வும், ஒருவருக்கொருவர் உதவி வாழுதல் ஆகிய கட்டுரைகள் உள்ளன. சமூகம் என்ற பிரிவில் மட்டக்களப்பில் சிதைந்து வழங்கும் சொற்கள், இலட்சியமும் சமநோக்கும், மனிதனை மனிதன் உள்ளத்தால் அணுகுவதே மொழி, பாடறிந்து ஒழுகும் பண்பு, தியாகசேவை வேண்டும், சூழ்ந்த பார்வையுள்ள நல்லாசிரியர் வாழ்க, பேராசை ஒரு பல தலைப்பேய், நாடகம் ஆடுவானேன் நாம் அதை நாடுவானேன் ஆகிய கட்டுரைகள் உள்ளன. தமிழறிஞர் என்ற பிரிவில் விபுலானந்த அடிகளார், விபுலானந்த அடிகளாரின் கல்வித் தொண்டு, வித்தக விபுலானந்தரின் நினைவு, வைத்திலிங்க தேசிகர், நாவலர் பெருமான், தி.த.கனகசுந்தரம்பிள்ளை, வித்துவான் ச.பூபாலபிள்ளை, அடியார்க்கடியன் சரவணமுத்தன் ஆகிய கட்டுரைகள் அடங்கியுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப் பட்டது. சேர்க்கை இலக்கம் 21122).

ஏனைய பதிவுகள்

Big Five Gratuit

Content Casinourile Își Măsluiesc Aparatele Au Jocurile Ş Sloturi Noi? – marco polo slot Ce Cazinouri Online Ori Cele Mai Bune Păcănele Care Fructe? Blackjack