12850 – வான்மீகியார் தமிழரே: ஆராய்ச்சிக் கட்டுரைகள்.

தென்புலோலியூர் மு. கணபதிப்பிள்ளை. சென்னை 600001: பாரி நிலையம், 59, பிராட்வே, 1வது பதிப்பு, அக்டோபர் 1966. (சென்னை 600017: சௌந்தரா பிரின்டர்ஸ்).

80 பக்கம், விலை: இந்திய ரூபா 1.75, அளவு: 21.5 x 14.5 சமீ.

தென்புலோலியூர் மு.கணபதிப்பிள்ளை அவர்களின் தமிழிலக்கிய ஆய்வுக் கட்டுரைகள் ஏழின் தொகுப்பு. மு. கணபதிப்பிள்ளை பருத்தித்துறை புலோலி கிராமத்தில் தமிழ் வித்துவப் பரம்பரையில் பிறந்தவர். இலங்கை அரச மொழித் திணைக்களத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றியவர். இலங்கை வானொலியிலும், இலக்கிய மேடைகளிலும் மற்றும் இலக்கிய நூலுருவாக்கத்திலும் பெரும் பங்களிப்பை வழங்கியிருந்தவர். இவரது மனைவி தனபாக்கியம் ஒரு வயலின் இசைக்கலைஞர். இலங்கை வானொலிக் கலைஞர் கமலினி செல்வராஜன் இவர்களது மூத்த மகள் ஆவார். அன்னை தயை, தமிழன் எங்கே, ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள், பயிற்சித் தமிழ் 1, மொழிபெயர்ப்பும் சொல்லாக்கமும், மொழியும் மரபும் ஆகிய நூல்களை ஏற்கெனவே எழுதியுள்ளார். ‘வான்மீகியார் தமிழரே’ என்ற இவ்வாய்வுக் கட்டுரைத் தொகுப்பில், வான்மீகியார் தமிழரே, ஆடலும் பாடலும், நெடுங்கணக்கின் கதை, பழந்தமிழ்க் கடவுள் முருகன், வள்ளுவர் கூறிய அறிவியல் ஒப்புரவு, திருவள்ளுவர் நகை செய்கிறார், மொழிபெயர்ப்பு-ஒரு கலை ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24040).

மேலும் பார்க்க: 12197;.

ஏனைய பதிவுகள்