12371 – கலாசுரபி: தூண்டல்-02, துலங்கல்-11.

மலர்க்குழு. யாழ்ப்பாணம்: தேசிய கல்வியியற் கல்லூரி, கோப்பாய், 1வது பதிப்பு, 2011. (யாழ்ப்பாணம்: குரு பிரிண்டர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி).

ix, 181 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×17.5 சமீ.

கல்லூரியில் ஐந்து வருட பீடாதிபதி சேவையைப் பூர்ததியாக்கும் உயர்திரு எஸ். கே.யோகநாதன் அவர்களின் சிறப்புமலர். யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி பீடாதிபதி S.K.யோகநாதன் அவர்களின் அறிக்கையுடன் தொடங்கும் இம்மலரில் கற்றல் கற்பித்தல் விருத்தியாக்கமும் நவீன தர மேம்பாடு முகாமைத்துவம் (ளு.மு.யோகநாதன்), சுற்றுலாத்துறையும் சிறுவர் பாலியல் துஸ்பிரயோகங்களும் ஆய்வியல் நோக்கு (டீ.ஜீ.சில்வா), யாழ் மாவட்ட ஆரம்பப் பாடசாலைகளிற் போதனா முகாமைத்துவம் (நிர்மலாதேவி நல்லையா), கற்றல் செயற்பாடுகளில் மாணவர்களுக்கு ஆர்வமூட்டல் (ஞா.கணேசநாதன்), யாழ்ப் பாணம் தேசிய கல்வியற் கல்லூரி பத்தாம் ஆண்டின் நிறைவில் பரிணமிக்கின்றது, இராமு சண்முகம் பேரம்பலம் நாகரத்தினம், கல்விக் காருண்யன் திருமிகு. பேரம்பலம் நாகரட்ணம் அவர்களின் பொதுச் சேவையை பாராட்டி ‘கல்விக் காருண்யம்” எனும் பட்டத்தினை வழங்கி நிறுவனத்தால் வழங்கப்பட்ட 370.05 கல்விநிறுவனங்களின் ஆய்விதழ்கள், ஆண்டு மலர்கள்நூல் தேட்டம் – தொகுதி 13 211 வாழ்த்துப்பா, ‘தரம் – 1 மாணவர்களுக்கிடையே உறுப்பமைய எழுதாமல் இடர்படும் மாணவர்களை அந்நிலையிலிருந்து மீட்டெடுத்தல்” (நி.ஷியாமளா மகாலிங்கம்), தேசிய கல்வியியல் கல்லூரிகளின் நிர்வாக நடைமுறையில் பீட்டர் டிரக்கரின் முகாமைத்துவக் கோட்பாடு (க.பாஸ்கரன்), பெற்றோரின் நெருக்கீடுகளும் பிள்ளைகளின் எதிர்பார்ப்புக்களும், கற்றல் கற்பித்தலில் ஞாபகம் (சுகந்தினி அன்ரனி தவச்செல்வம்), ‘அம்மையே அப்பா”: பெற்றோர், இளைஞர், யுவதிகளுக்கான விழிப்புணர்வு நாடகம்- (க.இ.கமலநாதன்), அன்றைய மெஞ்ஞானமும் இன்றைய விஞ்ஞானமும் (த.யோகதர்சினி), ஈழத் தமிழர் பண்பாட்டில் நாட்டாரிசை ஏற்படுத்திய தாக்கங்கள் (வி.நரேந்திரா), மூத்தோர் வார்த்தை கேள் (நடராசா விஜிதரன்), ஆசிரியர் செயற்பாடு சார்ந்த தரக்கணீப்பீடு, இலக்கியங்கள் காலத்தின் கண்ணாடி (கோகிலவாணி சுந்தரலிங்கம்), தீர்மானம் எடுத்தல் நுட்பங்கள் (ஏ.குகன்), சமூக மாற்றமும் ஆசிரியர் வகிபாகமும், ஆசிரியர் என்னும் ஆச்சரியம் (வன்னியசிங்கம் குகானந்தி), கற்றல் கட்டுருவாக்கம் கல்விப்புலம் (M.E.B. மரியதாசன்), அறிவுரை (வி.சுதாஜினி), நாடகம் எனும் எண்ணக்கருவும், செய்கையும் செய்கைக்கான பின்புலமும் (க. திலகநாதன்), ரூசோவின் கல்வி தத்துவம் இலங்கையின் கல்வி அமைப்பில் ஏற்படுத்திய தாக்கம் (ஜானகி தர்மசீலன்), 11ம் அகவை காணும் எங்கள் ஆலமரம், தொலைக்காட்சி (நிவேதிக்கா), இன்றைய கல்வி அறிவை மாத்திரமின்றி திறனையும் வேண்டி நிற்கின்றது (நிஷாந்தினி விஜயசிங்கம்), கற்றலும் ஞாபகத்திறனும்… (எஸ்.மேரி கிறிஸ்டினா), யாழ்ப்பாண மாவட்ட ஆரம்பப் பாடசாலைகளில் 2003ஆம் ஆண்டின் கல்விச் சீர்திருத்தங்களை அமுலாக்குகையில் எதிர்கொள்ளப்படும் பிரச்சினைகள் ஆகிய படைப்புக்கள் மாணவ ஆசிரியர்களாலும், விரிவுரையாளர் களாலும் எழுதிச் சேர்க்கப்பட்டுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 014338

ஏனைய பதிவுகள்

Gratorama Erfahrungen

Content Player Cannot Open Kasino Games Wie gleichfalls Lange Dauert Ausschüttung Inside Gratorama? Player Played With Aktiv Automatically Added Provision Complaints About Related Winorama Spielsaal

Igt Ports

Posts Choose Your own Games! Tricks for Profitable 100 percent free Online casino games On line Totally free Harbors Instead Down load And you can

16668 சிறுகதை பயிற்சிப் பட்டறை: தெரிவு செய்யப்பட்ட சிறுகதைத் தொகுப்பு.

கலாசாரப் பேரவை. வாழைச்சேனை: கலாசாரப் பேரவை, பிரதேச செயலகம், கோறளைப்பற்று, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (மட்டக்களப்பு: தமிழச்சு-அச்சகமும் பதிப்பகமும், 240, திருமலை வீதி). 32 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14

17690 பிணைப்பு (சிறுகதைத் தொகுதி).

ஏ.எஸ்.சற்குணராஜா. பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, நவம்பர் 2023. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 120 பக்கம், விலை: ரூபா 500.,