12374 – கலைச்செல்வி: 1974.

க.கனகசிங்கம், செல்வி வ.மாரிமுத்து (இணையாசிரியர்கள்), மு.இரத்தினம், செல்வி ஜீ.வடிவேல் (துணையாசிரியர்கள்). மட்டக்களப்பு: கலைச்செல்விக் குழு, முத்தமிழ் மன்றம், அரசினர் ஆசிரியர் கலாசாலை, 1வது பதிப்பு, 1974. (மட்டக்களப்பு: கத்தோலிக்க அச்சகம், இல.18, மத்திய வீதி).

(18), 64 பக்கம், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×19.5 சமீ.

ஈ.சி.வேலாயுதபிள்ளை அவர்கள் அதிபராகவிருந்த காலகட்டத்தில் வெளியிடப்பட்ட சிறப்பு மலர் இது. தமிழ்த் தெய்வ வணக்கம் (மனோன்மணியம்), கலாசாலை வாழ்த்துப்பா, மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலை: கலைச்செல்விக் குழு 1974இன் அறிக்கை, அதிபர் ஈ.சி.வேலாயுதபிள்ளை அவர்களின் ஆசியுரை ஆகியவற்றுடன் அறிஞர்கள், ஆசிரியர்கள், ஆசிரிய-மாணவர்களின் படைப்புகளை உள்வாங்கியதாக இம்மலர் வெளிவந்துள்ளது. கல்வியின் வரையறை (வி. ஆறுமுகம்), புதிய பாடத்திட்டமும் இடைநிலைப் பருவக் கல்வியும் (சோ. செல்வநாயகம்), நமது கல்விமுறையும் சமுதாயமும் (சி.சிவசேகரம்), நல்லவை செய்வோம் (க.கனகசிங்கம்), ஆரம்பக் கல்வியின் இசையும் அசைவும் (செல்வி பாலேஸ்வரி செல்லத்தம்பி), இலங்கைத் தமிழ்த் திரைப்படங்கள் (தம்பிஐயா தேவதாஸ்), வளம் பெறுவோம் (இ.சின்னு), நீங்காத நினைவுகள் (மு.சம்பந்தர்), அன்புடைய காதலிக்கு (வே.தங்கராசா), ஊமை நினைவுகள் (மு.இரத்தினம்), உள்ளத்தால் பொய்யா தொழுகின்… (மண்டூர் எஸ்.தில்லைநாதன்), சூழற் றொழிற்பாடு (பொன்.சிவாநந்தன்), குந்தியின் மடியில் கர்ணன் ஓரங்க நாடகம் (ஐ.சிவசுந்தரம்), கவனம் (கு.செல்வேந்திரத் தேவர்), வாணி விழாவில் பாடப்பட்ட கவிதை (இர.ரெங்கராஜன்), The Teacher of English Language and His Easy Approach to
it (M.Arumugam) இலங்கை கல்வி வரலாறு (திருமதி அ.வேலாயுதம்) ஆகிய கட்டுரைகள் இம்மலரை அலங்கரிக்கின்றன. இறுதிப்பகுதியில் சைவ மன்ற 370.05 கல்விநிறுவனங்களின் ஆய்விதழ்கள், ஆண்டறிக்கை 1974 (த. மனோகரராஜா), கிறிஸ்தவ மாணவ மன்ற அறிக்கை (கே.ஜீ.அருளானந்தம்), எமது சாரணர் படையின் ஆண்டறிக்கை 1974 (A.ஜோசப்), தமிழ் இலக்கிய மன்ற அறிக்கை 1974 (வே.தங்கராசா), கல்விக் கழக ஆண்டு அறிக்கை 1974 (வே. ஹரிதாஸ்), கணித விஞ்ஞானக் கழக ஆண்டறிக்கை 1974 (கே.ஜீ. அருளானந்தம்), விவசாய விஞ்ஞான கழக அறிக்கை (கே.சுப்பையா), அரசினர் ஆசிரிய கலாசாலை மட்டக்களப்பு (எஸ்.கனகமூர்த்தி), வருடாந்த இல்ல மெய்வல்லுநர்ப் போட்டி 1974, போட்டி முடிவுகள், அரசினர் ஆசிரிய கல்லூரி மட்டக்களப்பு, 1974ம் ஆண்டு பயிற்சி முடிந்து வெளியேறுவோர் ஆகிய விபரங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 007638).

ஏனைய பதிவுகள்

casino online pa

Hollywood casino online Betwhale promo code Online live casino Casino online pa Alle voorwaarden van toepassing. Alleen voor nieuwe spelers van 24 jaar en ouder.