12382 – கூர்மதி (மலர் 7): 2014.

கிறேஸ் சடகோபன் (மலராசிரியர்). பத்தரமுல்ல: தமிழ்
மொழி அலகு, கல்வி அமைச்சு, இசுறுபாய, 1வது பதிப்பு, 2014. (கொழும்பு:
அரசாங்க அச்சுத் திணைக்களம்).


xiv, 196 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18
சமீ.
கல்வி அமைச்சின் தமிழ் மொழி அலகு ஆண்டுதோறும் வெளியிடும் இம்மலரில்
பல்வேறு கல்வியியலாளர்களால் எழுதப்பட்ட பல்துறைசார் கட்டுரைகள், ஆக்க
இலக்கியங்கள் என்பன இடம்பெற்றுள்ளன. ஆயிரம் இடைநிலைப் பாடசாலைகள்
அபிவிருத்தியோடு மேம்படுத்தப்படும் விஞ்ஞான, கணித, விவசாய மற்றும்
தொழில்நுட்ப பாடத்துறைகள்(எஸ்.முரளிதரன்), இலங்கைப் பல்கலைக்கழகங்களில்
வெளிநாட்டு மாணவர்கள் (சோ.சந்திரசேகரம்), புனைகதைகளிற் பேச்சு வழக்கு
(க.இரகுபரன்), ஈழத்து இலக்கிய மொழிபெயர்ப்புகள் (கந்தையா ஸ்ரீகணேசன்),
கைகேயி சூழ்வினைப் படலத்தினூடாக வெளிப்படும் கம்பனின் கவித்துவம்
(ச.லலீசன்), தமிழ் மொழியில் ‘அ” எழுத்துக்குள்ள மாற்றொலிகளின் முக்கியத்துவம்
(எஸ்.ஜே.யோகராஜா), ஈழத்துச் சிறுகதை முன்னோடிகளான இலங்கையர்கோன்,
சி.வைத்தியலிங்கம் ஆகியோர் சிறுகதைகள்: மறு மதிப்பீடு (செ.யோகராசா),
சங்க இலக்கியங்களில் தோழி (செல்வரஞ்சிதம் சிவசுப்பிரமணியம்), நூலுரை
ஆசிரியன் (ஏ.எல்.அப்துல் கபூர்), பாடசாலைகளில் கவனமின்மைசார் தீங்குகளும்
உடலியல்சார் தண்டனைகளும் பற்றிய நோக்கு (செல்வரட்ணம் சந்திரராஜா),
மெல்லத் தமிழ் இனிச் சாகாது (கிண்ணியா ஏ.எம்.எம்.அலி), வெகுசன ஊடகமும்
கலாசாரமும் (ப.ராஜேஸ்வரன்), ஆற்றுப்படை இலக்கியத்தின் தோற்றமும்
வளர்ச்சியும் (ஜனகா சிவசுப்பிரமணியம்), பாடசாலைகளில் கற்றலும் கற்பித்தலும்
முறையாக முன்னெடுக்கப்படுகின்றதா? (எஸ்.எல்.மன்சூர்), உறவுகள் (சிறுகதைதியத்தலாவை எச்.எப்.ரிஸ்னா), பிஞ்சுமனம் (சிறுகதை-ரிம்ஸா முஹம்மத்),
இன்னும் எத்தனை நாட்கள் (சிறுகதை-இரா.சடகோபன்), இலங்கையின் தேசிய
கீதம் (வயலற் சரோஜா), இலக்கியச் சுவை: பொய் சொல்லுவது பாவமா? (வயலற்
சரோஜா), இலங்கையின் அபிவிருத்தியில் இலங்கை சீன ஒப்பந்தம் (சி.சிவசங்கர்),
இலங்கையில் இதழ்களின் தோற்றமும் வளர்ச்சியும் (றைஹானா அப்துல் ரஸ
hக்), தகவல் தொழில்நுட்பமும் இணையத்தள பயன்பாடும் (மா.திலக்ஷிகா),
கருவினில் சுமந்தவள் (குறுநாடகம்- எல்.சித்ரா), கருந்தேள் (கவிதை-எவ்.பவானி),
என் தாய் நானானால் (கவிதை- து. வுகாரி), கிராமிய பாடல்களும் தமிழும்
(எம்.ஐ.எப்.இஷ்ரா), நம்பிக்கையூன்றி நட (குறுநாடகம்- ஸ்ரீ வேதிகா), ஆகிய
ஆக்கங்களும், 2014ஆம் ஆண்டுக்கான அகில இலங்கை தமிழ்மொழித் தினத்
தேசிய நிலைப் போட்டிகளின் பெறுபேறுகள் பற்றிய அறிக்கையும் இம்மலரில்
இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை
யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 60137).

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

ஏனைய பதிவுகள்

Slot Reels

Articles 100 percent free Ports Against Real cash Slots Enjoy Ports Skywind Casino slot games Analysis No Totally free Games Range And Top-notch Video game