12384 – கொழும்பு இந்துக் கல்லூரி ஆண்டு மலர ; 1997.

க.சேய்ந்தன், க.ரமணேஷ் (இதழாசிரியர்கள்). கொழும்பு 4: கொழும்பு இந்துக் கல்லூரி, 77, லொரென்ஸ் வீதி, பம்பலப்பிட்டி, 1வது பதிப்பு, 1997. (கொழும்பு: சரசு அச்சகம்).

190 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 23×18 சமீ.

கொழும்பு இந்துக் கல்லூரி, 1951 ஆம் ஆண்டு பெப்ரவரி 12 ஆம் திகதி ‘பிள்ளையார் பாடசாலை” என்ற பெயருடன் கொழும்பு இந்து வித்தியாவிருத்திச் சபையினால் தொடங்கப்பட்டது. நீதியரசர் செல்லப்பா நாகலிங்கம் தலைமையில் 24 அங்கத்தவர்களைக் கொண்டு இச்சபை ஆரம்பிக்கப்பட்டது. இக்கல்லூரி இப்போது இயங்கிவரும் காணி சம்மாங்கோடு மாணிக்க விநாயகர் கோயில், மற்றும் கதிரேசன் கோயில் தர்மகர்த்தாக்களால் வழங்கப்பட்டது. இப்பாடசாலையின் முதல் அதிபராக இருந்தவர் கார்த்திகேசு பத்மநாபன். ஆரம்பப்பிரிவு அதிபராக ரி. சதாசிவம் பணியாற்றினார். உயர் வகுப்புகள் 1953 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டன. 1953 ஆம் ஆண்டு அப்போதைய இலங்கைப் பிரதமர் சேர் ஜோன் கொத்தலாவல கொழும்பின் புறநகரான இரத்மலானையில் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல்லை நாட்டினார். இதனை அடுத்து ஐந்தாம் வகுப்புக்கு மேற்பட்ட வகுப்புகள் 1955 ஆம் ஆண்டு இரத்மலானைக்குக் கொண்டு செல்லப்பட்டன. இரத்மலானை பாடசாலை ‘கொழும்பு இந்துக் கல்லூரி” என்றும், தற்போதைய பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி ‘இந்து கனிஷ்ட பாடசாலை” எனவும் பெயர் மாற்றங்கள் பெற்று இயங்கிவரத் தொடங்கின. கல்விப் பொதுத்தராதர உயர்வகுப்பு 1976 இல் ஆரம்பிக்கப்பட்டது. இப்பாடசாலை 1976 சனவரி 1 ஆம் நாள் ‘கொழும்பு இந்துக் கல்லூரி” எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. கல்லூ ரி அதிபர் செய்தி, அஞ்சலி, நிறுவுநர் நினைவுநாள், பாடசாலை அபிவிருத்திச் சபை, பழைய மாணவர் சங்கம், விளையாட்டு அறிக்கைகள், இல்ல அறிக்கைகள், சங்கங்களும் அமைப்புகளும், ஆசிரியர் நலன்புரிக் கழகம், பிரிவுபசாரம், மாணவர் ஆக்கங்கள், ஆசிரியர் பட்டியல், இதழாசிரியர் குறிப்பு ஆகிய விடயங்கள் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 22338).

ஏனைய பதிவுகள்

Incentives and you may Features

Articles Should i Download the new Lucky Larry Lobstermania 2 Position to try out? Seeking a casino Added bonus to play Lucky Larry’s Lobstermania Slots?

Lucky8 Casino Review

Content Paradise found Keine kostenlosen Einzahlungspins: Lucky 8 Off Was Zu Tun Sein Eltern Via Book Of Ra Deluxe Für Nüsse Aufführen Bloß Registrierung Variante