12395 – சிந்தனை: தொகுதி I இதழ் ; 3,4 (புரட்டாதி, மார்கழி 1976).

அ.சண்முகதாஸ் (இதழாசிரியர்), ஆ.சிவநேசச்செல்வன் (நிர்வாக ஆசிரியர்). யாழ்ப்பாணம்: மனிதப் பண்பியற் பீடம், இலங்கைப் பல்கலைக்கழக யாழ்ப்பாண வளாகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, மார்கழி 1976. (யாழ்ப்பாணம்: கூட்டுறவு அச்சகம், பிரதான வீதி).

63 பக்கம், விலை: ரூபா 20.00, அளவு: 24×18 சமீ.

இவ்விதழில் மலர் 3க்குரிய கட்டுரைகளாக, யாழ்ப்பாண வளாகத்தில் ‘தமிழ் நாவல் நூற்றாண்டு” தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட வங்காள நாவல்கள் தமிழ் நாவல்களில் ஏற்படுத்திய தாக்கம் (செ. யோகராசா), பெண்களும் தமிழ் நாவலும் (மனோன்மணி சண்முகதாஸ்), இரு காந்தீய நாவல்கள் (சோ. கிருஷ்ணராஜா), 19-ம் நூற்றாண்டில் ஆங்கிலக் கல்வியும் தமிழ் நாவலின் தோற்றமும் (சாந்தினி சந்தானம்) ஆகிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. மலர் 4இற்குரிய கட்டுரைகளாக மத்தியகாலத் தமிழ்நாட்டு இந்துக் கோவில்கள் – தொழில் நிறுவனங்கள் (செல்லத்துரை குணசிங்கம்), ஞாயிற்றுச் சக்தியும் அதன் சமநிலையும் (அ. கணபதிப்பிள்ளை) ஆகிய இரு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Juegos sobre Tragamonedas Online Regalado 2024

Content ¿Para los primero es antes debes experimentar tragamonedas novedosas? Las diversos tipos de máquinas tragamonedas Funciona tragamonedas gratuito para divertirte Muchos criterios sobre juegos

17924 ஆழிசூழ் நெடுந்தீவகத்தில் அவதரித்த அமுதுப் புலவர்: தமிழ் கங்கை அமுதுவின் 2ஆம் ஆண்டு நினைவுமலர்.

மலர் வெளியீட்டுக் குழு. லண்டன்: அமரர் அமுதசாகரன் அடைக்கலமுத்து குடும்பத்தினர், 2012. (யாழ்ப்பாணம்: ஜெயா பிரின்டர்ஸ், 100, நான்காவது குறுக்குத் தெரு). 56 பக்கம், ஒளிப்படங்கள், விலை: அன்பளிப்பு, அளவு: 20.5×14.5 சமீ. நெடுந்தீவைப்