சி.க.சிற்றம்பலம் (இதழாசிரியர்), சி.முருகவேள் (நிர்வாக ஆசிரியர்). யாழ்ப்பாணம்: கலைப்பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, மார்ச் 1983. (யாழ்ப்பாணம்: செட்டியார் அச்சகம், 430, காங்கேசன்துறை வீதி).
100 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 10., அளவு: 20.5×15 சமீ.
இலங்கையில் நவீன கல்வியும் கோல்புறூக் விதப்புரைகளும் (வ.ஆறுமுகம்), இலங்கையைச் சிறப்பாகக் கொண்ட கிராமிய சமுதாய விருத்திக்கான நோக்குகள் (இ.மதனாகரன்), தமிழ்மொழி கற்றல் கற்பித்தலில் ஒத்த கருத்துள்ள சொற்களும் எதிர்க் கருத்துள்ள சொற்களும் (சு.சுசீந்திரராஜா), சேர். செய்யித் அகமத்கான்: இந்திய முஸ்லிம் தேசியவாதத்தின் தொடக்கம் (எம்.எஸ்.எம்.அனஸ்), தமிழர் சமயப் பாரம்பரியத்தில் நாவலர் (மௌ.சித்திரலேகா), திருக்குறளும் ஒழுக்கமும் (வே.இராமகிருஷ்ணன்), பிராமிக் கல்வெட்டுக்களும் தமிழும் (சி.க.சிற்றம்பலம்), நிலவளமும் நிலப்பயன்பாடும் (செ.பாலச்சந்திரன்) ஆகிய ஆய்வுக் கட்டுரைகள் இவ்விதழை செழுமைப்படுத்தியுள்ளன.