சி.க.சிற்றம்பலம் (இதழாசிரியர்). யாழ்ப்பாணம்: கலைப்பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, ஜுலை 1983. (யாழ்ப்பாணம்: மகாத்மா அச்சகம், ஏழாலை மேற்கு, ஏழாலை).
(7), 154 பக்கம், அட்டவணைகள், விலை: ஆண்டு சந்தா ரூபா 60., அளவு: 24×17 சமீ.
இவ்விதழில் தமிழ்மொழிப் பாடநூல்களில் பேச்சுத் தமிழும் எழுத்துத் தமிழும் (சு.சுசீந்திரராஜா), விகிதாசாரப் பிரதிநிதித்துவமும் தமிழ்பேசும் சிறுபான்மை இனங்களின் அரசியல் நலன்களும் (வே.மணிவாசகர்), வரண்ட பிரதேசக் குடியேற்றத் திட்டங்களின் உற்பத்தித் திறனில் தொழில்நுட்பங்களின் பங்களிப்புப் பற்றிய மதிப்பீடு (அ.கணபதிப்பிள்ளை), பிரித்தானிய மலாயாவில் யாழ்ப் பாணத்தவரின் அரசியல் நடவடிக்கைகள்(ச.சத்தியசீலன்), ஆரம்ப வகுப்புகளில் தமிழ்மொழி கற்பித்தல்: சில அடிப்படைப் பிரச்சினைகள் (எம்.ஏ.நு‡மான்), யாழ்ப்பாணக் குடாநாட்டில் 19ஆம் நூற்றாண்டில் நிலவிய பாரம்பரியக் கல்விமுறை (எஸ்.சிவலிங்கராஜா), யாழ்ப்பாண மாவட்ட மக்களின் இடப்பெயர்வு (கா.குகபாலன்), அம்பாறை மாவட்டத்தின் நிலப்பிரச்சினைகளும் குடியேற்றப்பிரச்சினைகளும் (எம்.வை.மொகமட் சித்தீக்), பண்டைய ஈழத்து யக்ஷநாக வழிபாடு (சி.க.சிற்றம்பலம்), நாவலரும் சைவசித்தாந்தமும் (கலைவாணி இராமநாதன்), புராண படனம்-அன்றும் இன்றும் (யோகேஸ்வரி கணேசலிங்கம்) ஆகிய ஆய்வுக்கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 59120).