12412 – சிந்தனை தொகுதி XIV, இதழ் 1 (பங்குனி 2004)

கார்த்திகேசு குகபாலன் (இதழாசிரியர்), சோ.கிருஷ்ணராசா (நிர்வாக ஆசிரியர்). யாழ்ப்பாணம்: கலைப்பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, மார்ச் 2004. (யாழ்ப்பாணம்: கரிகணன் தனியார் நிறுவனம், இல. 424, காங்கேசன்துறை வீதி).

127 பக்கம், விலை: ஆண்டு சந்தா ரூபா 600., அளவு: 24×17.5 சமீ.

இவ்விதழில் சமகால நோக்கில் இலங்கையில் சைவசமயம்-ஓர் ஆய்வு (நா. ஞானகுமாரன்), யாழ்ப்பாணத் தமிழில் பால்காட்டும் பெயராக்க உருபுகள் (சிவராணி சிறீசற்குணராசா), தமிழிலக்கணப் பாற்பகுப்பின் அடிப்படை (க.இரகுபரன்), மிருச்சகடிகம் சமகால சமூகத்தைப் பிரதிபலிக்கும் சமஸ்கிருத நாடகம் (சிறிகலா ஜெகநாதன்), நடப்பியல்-ஓர் அறிமுகம் (க.விசாகரூபன்), சிவானந்தலஹரி காட்டும் பக்திநெறி (விஜயலட்சுமி சிவச்சந்திரன்), தொழில்வாய்ப்பு மற்றும் பல்கலைக்கழகங்கள்: அடிப்படையும் பிரச்சினைகளும்-வளர்முக நாடுகளை அடிப்படையாகக் கொண்டது (மா.சின்னத்தம்பி), கந்தபுராணம் காட்டும் முருகவடிவங்கள் (மா.வேதநாதன்), டானியலின் படைப்புகளில் நடைநயம் (ம.இரகுநாதன்), தென்னிந்திய சாஸ்திரீய இசையில் 32 தாய்ராகப் பட்டியலை நடைமுறைக்குக் கொண்டுவருதல்: ஓர் ஆய்வுக் கண்ணோட்டம் (ஸ்ரீ தர்ஷணன்), மாறிவரும் பால்விகித மாற்றத்தில் பெண்கள்: ஒரு சமூக குடிப்பள்ளியியல் நோக்கு (கா.குகபாலன்) ஆகிய ஆய்வுக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. பங்குனி 2004இல் முதலாவதாக வெளிவந்துள்ள இவ்விதழின் தொகுதி iஒ எனத் தவறாக சிந்தனை இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்