12414 – சிந்தனை (தொகுதி XV, இதழ் 1).

கார்த்திகேசு குகபாலன் (இதழாசிரியர்). யாழ்ப்பாணம்: கலைப்பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, மார்ச் 2005. (யாழ்ப்பாணம்: கரிகணன் தனியார் நிறுவனம், இல. 424, காங்கேசன்துறை வீதி).

(6), 125 பக்கம், விலை: ஆண்டு சந்தா ரூபா 600., அளவு: 24×18.5 சமீ.

சிந்தனை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட ஆய்விதழாகும். வருடத்திற்கு மூன்று இதழ்களாகத் தொடங்கிய இவ்விதழின் 15ஆவது ஆண்டின் முதலாவது இதழ் இது. இலங்கைத் தமிழர் குடிபெயர்வு மலாய-மேற்குலகக் குடிபெயர்வு: ஓர் ஒப்பீட்டாய்வு (ச.சத்தியசீலன்), யாழ்ப்பாணப் பிரதேச மணற் படிவுகளின் தோற்றமும் பரவலும்: கொலோசீன் கால கடற்பெருக்கு நிகழ்வுகளுடன் தொடர்புபட்ட முறையிலான ஓர் புவியியல் நோக்கு (ளு.வு.டீ.இராஜேஸ்வரன்), ஈழத்து சிற்றிலக்கியங்களின் மரபு (செல்வரஞ்சிதம் சிவசுப்பிரமணியம்), சமஸ்கிருத மொழியும் சர்வதேச வலைப் பின்னலும்-ஓர் ஆய்வு (க.நவநீதகிருஷ்ணன்), ஈழத்தில் வைஷ்ணவப் படிமக்கலைப் பாரம்பரியம் காட்டும் விக்கிரகவியல் பண்பாட்டுச் சிறப்பியல்புகள்-ஓர் ஆய்வு (செ.கிருஷ்ணராசா), தென்னிந்திய சாஸ்திரீய இசையின் ஆரம்பப் பயிற்சிக்கு மிகவும் பொருத்தமான இராகத்தைக் கண்டறிவதற்கான செயல்நிலை ஆய்வு (ஸ்ரீதர்ஷனன்), பண்பாடும் கல்வியும்(ஜெயலக்சுமி இராசநாயகம்), தொல்காப்பியத்தில் இசைச் செய்திகள் (கிருபாசக்தி கருணா), நிரந்தரமற்றவற்றை நிரந்தரமாக்கல்: யாழ்ப்பாணத்துக் கோயில் முக மண்டபங்களின் கோல, நிலை மாற்றங்கள் (தா.சனாதனன்), இராமகிருஷ்ண பரமஹம்சரின் சிந்தனை:ஒரு நோக்கு (நாச்சியார் செல்வநாயகம்) ஆகிய ஆய்வுக் கட்டுரைகள் இவ்விதழில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்